பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 வல்லிக்கண்ணன் கதைகள் இந்தத் திருப்பணிக்குத் துவக்க விழா செய்து வைத்த அம்மணிக்கே "ஐயோ பாவம் என்று மனம் கசிந்து விட்டது. கண்களில் நீர் மல்குவது போல் தோன்றியது. 'இவனை இப்படியே விட்டுடப்படாது. போலிசிலே ஒப்படைக்கணும். அப்பதான் இவன் மாதிரி வீனன்களுக் கெல்லாம் எச்சரிக்கையாக இருக்கும்’ என்று வழிகாட்ட முன்வந்தார் ஒரு பெரியவர்.

  • பாவம் விட்டுடுங்க. என்னமோ செய்து போட்டான். அதுக்குத்தான் சரியான தண்டனை கிடைச்சுப் போச்சே!” என்று அருள் கூர்ந்தாள் நாகரிக அம்மை.

'ஏய், அவங்க சொல்றதுக்காக உன்னை இப்போ சும்மா விடுறோம். இனிமேல் இது மாதிரி வாலாட்டினே, ஆளு அடையாளம் தெரியாதபடி துவையல் பண்ணிப் போடு வோம். ஆமா ஜாக்கிரதை' என்று சொல்லி, இந்தா இதை நினைவு வச்சுக்கோ’ என்று ஒரு கும்குத்து கொடுத் தார் ஒருவர். அதைத் தொடர்ந்து கொசுறு ஆகச் சில அடிகள் அவனுக்கு வழங்கப்பட்டன. "இங்கே நில்லாதே போ!' என்று ஒரு கை அவன் கழுத்தைப் பிடித்து பலமாக நெட்டித் தள்ளியது. முன்னே போய் தள்ளாடி விழுந்திருக்க வேண்டியவன் தான். எப்படியோ சமாளித்துக் கொண்டு நடந்தான் சுயம்பு. "என் உணர்ச்சி தூண்டுகிறபடி செயல்புரிய எனக்கு உரிமை இருக்குமானால், மற்றவர்களுக்கும் அவரவர் உணர்ச்சித் துடிப்பின்படி செயல்புரியும் சுதந்திரம் இருக்கும்