பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிதாய்ப் பிறந்தவர் கும்பலும் கூச்சலும் அந்தத் தெருவைத் தாண்டி மூலை திரும்பிவிட்டதை தேய்ந்து மெலிந்து வந்த ஒலிகள். உணர்த் தின. என்றாலும் பால்வண்ணம் பிள்ளை கல்லுப்பிள்னை யார் மாதிரி தன் வீட்டு திண்ணையில் குறுகுறு என்று உட் கார்ந்தார். அவர் மனசே இடிந்து போய்விட்டது போலிருந் தது. சற்று நேரத்திற்கு முன்பு அந்த வீட்டின் முன்னே நடத் தப்பட்டிருந்த கூத்து அவரை அதிரடித்துவிட்டது. அவ் ஆர்க்காரர்களிடமிருந்து அப்படி ஒரு தாக்குதலை அவர் ஒரு நாளும் எதிர்பார்த்ததில்லை. - தன்னைப் பற்றிப் பலரும் கேலி பேசுவதும், கேவல மாகக் கருதுவதும் குறை கூறித் திரிவதும் பால்வண்ணம் பிள்ளைக்கு வெகுகாலமாகவே தெரிந்துதான் இருந்தது. ஆயினும் இப்படி நடக்கக் கூடும் - தனது ஊர்க்காரர்களே இவ்விதம் நடந்துகொள்வார்கள்-என்று அவர் கனவிலும் எண்ணியவரல்லர். அந்த ஊரில் மழை பெய்யவில்லை. ரொம்ப நாட்களா கவே பெய்யவில்லை. மழை உரிய காலத்தில் வந்துவிடும் என்று நம்பி, எதிர்பார்த்து ஊரர்கள் விவசாய அலுவல் களை ஒழுங்காகச் செய்து முடித்திருந்தார்கள்.