பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 நல்ல முத்து கழுத்திலே கிடந்த மாலையைக் கவனித்தார் அவர். அவர் கண்களையே நம்ப முடியவில்லை. ஒவ்வொரு முத்தும் தனித்தனி நட்சத்திரம் போல் ஜொலித்துக் கொண்டிருக் தது. சிங்காரம் கூட முன்னிருந்ததை விடப் புதுமை யான வனப்புடன் விளங்குவதாக கினைத்தார் அவர். சிங்காரம், நீ பெரிய மந்திரக்காரி போலிருக்கு. இங்கே கொடுத்துவிட்டுப் போன முத்துமாலை ஒரேயடி "யாக மங்கிப் போச்சு. அதனுடைய பளபளப்பெல்லசம் கழுத்திலே கிடக்கிற மாலைக்கு வந்திருக்குதே. இது வி ட் டு க் கூடு பாய்கிற வித்தை மாதிரியல்லவா தானுது, ஏதாவது சூனிய வேலையா சிக்காரம்? ன்று பாதி விளையாட்டாகவும் பாதி கிஜமாகவுமே விசாரித்தார் அவர். ‘மந்திரமுமில்லை, சூனியமுமில்லை சாமி. கல்முத்து குணமே அது. தேகத்திலே பட்டுப் பட்டு, போட்டிருக் கிறவங்க ரத்தத்திலே யிருந்து சத்து ஏற்று மின்னும் அது. உங்க விட்டு அம்மா தேகத்திலே கல்ல ரத்தம் எங்கே யிருக்குது? அதனுலேதான் நல்ல முத்துக்கள் கூட மண்ணுருண்டை மாதிரி மாறிப்போகுது. நான் ஊரு சுற்றி உழைக்கிறேன். என் உடலிலே தெம்பு இருக்கு. முத்துக்கள் ஏன் மங்கப்போகுது. இத்தா சாமி உன் மாலை, இதை எடுத்துக்கிட்டு அக்த மாலையைக் கொடுத்திரு சாமி என்ருள். - பண்ணே யார் வெயிலுகந்தகாதர் என்னென்னவோ எண்ணினர். இரண்டு மாலைகளையும் அவளுக்கே கொடுத்து அவளைத் தன் ஆசை நாயகியாக ஆக்கிக் கொள்ளலாமே என்று கூட கினைத்தார். தன் ஆசையைச் சொல்ல க், தயங்கினர். அதற்குள் அவள் அவசரப்படுத்தினுள். 'அந்த மாலையைக் கொடு சாமி. நான் போசனும், கான் ஊர் சுற்றுகிறவ. ஒரு இடத்திலே என்னுல்,