பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவளும் சின்னவளும் 109 விட்டு, அக்காளைப் பின் தொடர்ந்து அவள் அறைக்குப் போனுள். அக்காள் கதை சொல்ல ஆரம்பித்தாள். ஒரு ஊரிலே ஒரு பாட்டி இருந்தாள்....” f சரோஜா குறுக்கிட்டாள். நீ ஆரம்பிக்கிற கதை எல்லாமே இப்ப்டித்தான்-ஒரு ஊரிலே, ஒரு ஊரிலே பின்னு. அந்த ஊருக்கு என் ஒரு பேரு இருக்கப் படாது? - ஏட்டி, நான் இப்பவே சொல்லிவிடுகிறேன். நீ இது மாதிரி எல்லாம் வீண் கேள்வி கேட்கப்படாது. கேட் டால்...' 'இது வீண் கேள்வியா அம்மா? ஊர்னு இருந்தால் பேரு இருக்காதோ? இல்லே கேட்கிறேன்.” 'இந்த ஊருக்குப் பேரு கிடையாது. அவ்வளவு தான்.” "சரி. ஒரு பாட்டி இருந்தன. அப்புறம்: அவளுக்கு ஒரு பேத்தி உண்டு. ‘பாட்டி இன்னியே, அவ எப்படி இருக்கா உயரமா, தடியா, தலே கரைச்சுப் போய் இருந்தாளா எலும்பும் தோலுமா, மொட்டைத் தலைப்பாட்டியாக இருக்காளா? அவ யார் வீட்டிலே இருந்தா? ‘பாட்டி தனியாகத்தான் இருந்தாள்.சகோஜா, நான் கதையைத் தொடர்ந்து சொல்றதுக் குள்ளேயே அவசரப்பட்டு விடுகிறே. அது தப்பு ...' 'சந்தேகம் வந்தால் கேள்வி கேட்கப் படாதோம்மா? இது என்ன கியாயம்?’ எனச் சிணுங்கினுள் தங்கை.