பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீல வானிலே மேகங்கள் நீந்திக் கொண்டிருந்தன, காத்தில் அடிபட்ட வெண் துசைக் கூட்டம் போல. மண் விண்ணேப் பார்த்து கின்றது, வறண்ட சுடு மூச்சோடு. வாழ்க்கை வெயிலில் அடிபட்டுத் தளர்ந்த வர்களின் முகத்திலே காலம் கீறி விடுகிற ரேகைகளைப் போல், பூமிப் பசப்பின் நெடுகிலும் கீறல்கள் வெடித்துக் கிடந்தன. வளம் குன்றியிருந்தது. பசுமைக்குப் பஞ்சம் எதட டடிருகதது. வானத்திலே, மாவுக் குவியல்கள் போலவும், ஐஸ் கட்டிகள் போலவும், பஞ்சுத் திவலைகள் போலவும், கொட்டிக் குவித்த மல்லிகைப் பூத் தொகுப்புகள் போல வும், மேகங்கள் சிதறிக் கிடந்தன. - 'இம் மேகங்கள் சூலுண்டு மழையாகப் பொழியு மானுல்!” என்ற ஏக்கம் மண்ணின் பார்வையில் பொதிந்து கிடக்கது. 'காம் அங்கே போவோமா? என்று கேட்டது மேகங்களில் ஒரு மேகம். ‘அங்கே போவதற்குள் நாமே இல்லாமல் போவோம். நம்மை நாமே இழந்து விடுவோம் என்றது, ஞானியின் தாடியைப் போல் வெள்ளே வெளேர் என்றிருந்த மேகம் ஒன்று. அதில் இன்பம் உண்டு, கொடுப்பதிலே தனி இன் பம் இருக்கிறது. பிறருக்கு உதவுவதே பேரின்பம்' என்றது மற்குென்று.