பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் - 117 லேவானம் மோனமாய் சிரித்துச் சொன்னது: உண் மை. உங்களுக்குக் கிடைத்துள்ள வாழ்க்கை அற்புக மானது, மக்களின் வாழ்க்கையைப் போல வாழ்வு சிறப்புறுவது ஈகையில்ை, அளிக்கும் போது மகிழ்வு பிறக்கிறது. அது பன்மடங்காய் பெருகிப் பரிணமிக் கிறது. எங்கும் இன்பம் மலர்கிறது. காம் கொடுப்பது நமக்கே வந்து சேர்கிறது, ஏதேனும் ஒரு வகையிலே. கொக்குக் கூட்டங்கள் போலவும், சலவைத் துணிகள் போலவும், நீள் கடலின் வெண்மய அலைகள் போலவும் மிதந்த மேகங்கள் மெளனமாயின. விண்ணின் குரல் அவற்றுக்குப் புரிந்தகோ என்னவோ! புரிந்து கொண் டது போல் சில தோற்றம் காட்டின. பெருத்தன. கனத்தன. காருருப் பெற்றுத் தாழ்ந்து காழ்ச்து இறக் கின. வியன் வான் முழுவதையும் வியாபித்துப் பாத்தன. கண்ணுடிக் குண்டுகளைப் போலவும், வெள்ளிக் கம்பிகள் போலவும் ர்ேச்சரம் உகுத்தன மேகங்கள். துாறல் சிந்தி, பெறுத் துறலாய் கனத்து, மழையாகப் பொழிந்தது. எங்கும் நீர்....நீர்....நீரின் காடு! மழை கின்றதும் வானம் நீலமாய் சிரித்தது. மேகத் தையே காணுேம். எனினும் விண் வருந்தவில்லை. பூமியின் உள்ளம் குளிர்ந்தது, வயிருரச் சோறு உண்டவனின் அகத்தைப் போல. அதன் மேனி முழு வதம் மலர்ச்சியுற்றது. காலத்தின் வருடுதல் ஏற்று, எங்கும் பசுமையும் பன்னிறமும் வளமும் குஅங்கின. நெடுகிலும் நீர் நிறைந்து கிடந்தது. விண் கணக் தோறும் மண்ணின் மாற்றத்தைக் மண்டு மகிழ்த் து அழகுற்றுக் கொண்டுதானிருந்தது.