பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சம்



தோன்றிற்று. ஆனல் ஒடுக்க முடியாத எதிரியாகத் திகழ்த்தார், பண்ணையார்.


பண்ணைக்காடு-

விசேஷமான வட்டாரம் அது. வளமான பிராந்தியம். ஓங்கி வளர்ந்த மலை ஒருபுறம், அங்கு சந்தன மரங்களும், தேக்கும், மூங்கிலும் காடுகாடாக வளர்ந்து நின்றன. ஆள்வோர்... அதையெல்லாம் தமது உடமையாக மதித்திருந்தனர். ஆனுலோ ஒண்டிப்புலி தாராளச்சொந்தம் பாராட்டி, இஷ்டம்போல் மரங்களை வெட்டி விற்கத் தயங்கியதில்லை. எச்சரிக்கைகளும், பயமுறுத்தல்களும் பலனளிக்கவில்லை. மேலும் அவர் நேரடியாக ஈடுபடுவதில்லை. கள்ளத்தனமாக இவ்வேலை செய்பவர் களுக்கு ஆதரவளித்து நிறையப் பங்கு பெற்றுவந்தார்.

ஆப்காசி இலாகாவுடனும் போட்டியிட்டார் அவர். கள்ளச் சாராயம் காய்ச்சுகிற தொழில் அவர் எல்லைக்குள் பெரிய அளவில் வளர்ந்தது என்று கணக்கிட்டிருந்தார்கள். ஆயினும் அவரை வசமாக 'மாட்டி வைக்க' இயல வில்லை சம்பந்தப்பட்டவர்களினாலே.

ஜெயிலிலிருந்து தப்பி ஓடிவத்துவிட்ட பயங்கரக் கைதி மூக்கத்தேவனை பண்ணையார் மறைத்து வைத்துக் கொண்டு, தான் எண்ணியதைச் செய்து முடிக்கக்கூடிய 'ஏவல் பூதம்'ஆக உபயோகிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

அவரை அடக்கவந்த அதிகாரிகள் அவரது நண்பர்களாக மாறி வாழ்ந்தார்கள். அவர்மீது சந்தேகம் கொள்ள ஏதுவில்லை என்று ஓங்கி அடித்தார்கள்.