பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

S வஞ்சம்



இல்லாமல் நடந்துகொள்கறார் என்ற ஆச்சர்யம் உண்டாகும் என்று சொன்னார் ஒருவர்.

'என்ன விஷயம்? ஏன் அப்படிச்சொல்கிறீர்கள்?' விசாரித்தார் இன்ஸ்பெக்டர்.

'யாராவது ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள் என்று வையுங்கள். ஒன்டிப்புலி அருகில் இருந்தால் கூட, காப்பாற்றி உதவக் கூடிய வசதி இருந்தால் கூட, ஒரு விரலையும் அசைக்கமாட்டார். முகத்திலே சிரிப்பு தவழ, அமைதியா வேடிக்கை பார்த்து நிற்பார். ஒரு சமயம் குழந்தையை மாடு முட்டித் தரையோடு தரையாகத் தேய்க்கும் போதும் அவர் வேடிக்கை பார்த்து நின்றார். அவர் கையில் தப்பாக்கி இருந்தது. ஒரு பெண்ணை எருமை மாடு துரத்திக் கொம்புகளினால் துக்கி எறிந்த போதும் சிரித்துக்கொண்டு தான் நின்றார். இரண்டு பேர் சண்டையிட்டு ஒருவனை ஒருவன் கத்தியால் குத்தி நின்றனர். கொலை விழக்கூடிய அச்சூழ்நிலையில்கூட அவர் கையைக் கட்டிக்கொண்டு, வேடிக்கை பார்த்து நின்றாரே தவிர அவர்களை விலக்கிவிட எவ்வகை முயற்சியும் செய்யவில்லை என்றனர் விவரமறிந்தவர்.

'உம்' என்று தலையாட்டினார் எல்லைக்குநாதர். வேறோன்றும் சொல்லவில்லை, வெளிப்படையாக.


வ்வளவு புகழ் பெற்ற ஒண்டிப்புலியா பின்காயை நேரடியாக சக்திக்க வேண்டியதுதான் என்று தீர்மானித்தார் இன்ஸ்பெக்டர். உத்தியோகத் தோரணையில் எதிரியாக அல்ல. அந்த வட்டாரத்துக்குப் புதிதாக வந்திருப்பதால், செல்வாக்குள்ள பண்ணையாரோடு அறிமுகம் செய்துகொள்ளும் எண்ணத்தினால்தான். இப்படித் தான் சொல்லிக்கொண்டார் அவர்.