பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சம் 19



'சீவுலி' என்னு கேட்ட அடிக்கடி வந்து சாகுதுக தேளுக. தேரோட்டமாக எது வருமோ பாம்பு வந்தாலும் வரும்’- இப்படிக் கேலி பேசினார் எல்லைக்கு நாதர்.

"இதுமாதிரி எல்லாம் பேசாதிங்க. இந்த வருஷம் தவசுக்கு நாமளே நேரே சங்கரன் கோவிலுக்குப் போயி, கோமதி அம்மனுக்குச் செஞ்சிட்டு வர்றதுதான் நல்லது. அம்மனுக்கு ஏனோ நம்ம பேரிலே கோபம் ஏற்பட்டி ருக்கு’ என்றாள் மீனாட்சி.

பிள்ளை கனைப்புச் சிரிப்பு சிந்தினார். சொன்னார்:'இது உங்க கோமதி அம்மன் கோபம் இல்லை,மீனு. எங்க குட்டிச் சாத்தானின் கோபம் செய்கிற காரியம்னு தான் எனக்குத் தோணுது...' -

'கக்கே பிக்கேன்னு உளராதிங்க!' என்று சிடுசிடுத்தாள ஸ்ரீமதி.

அவள் பேச்சை ஒடுக்கும்படியாக அடித்துப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடவில்லை என்று எண்ணிய எல்லைக்குநாதர் மெளனமானார்,

எனினும் அவர் மனம் சும்மா இருக்கவில்லை; பண்ணையார் ஒண்டிப்புலியைப் பற்றி இஷ்டம் போல் எண்ணிக் கொண்டிருந்தது. மந்திர தத்திரங்களைப் பற்றி, யட்சிணி வேலைகளைப் பற்றி, குறளிக் கூத்துக்களைப் பற்றி, எல்லாம் நினைவுப் பின்னலை இழைய விட்டது; 'ஒண்டிப்புலி இதுமாதிரி விவகாரங்களில் ஈடுபாடு உள்ளவன் தான்; அதில் சந்தேகமே கிடையாது'என்று முத்திரை குத்தியது.

எல்லைக்குநாதர் இவ்விதம் எண்ணியதில் நியாயம் இருந்தது. நட்டுவாக்காலி விஜயம் செய்த நாள், அவர் பண்ணையாருக்கு விரோதமாகச் செயல் புரிந்த தினம்