பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 வஞ்சம்



நாள். எல்லாம் பண்ணையாருக்குப் பாதகம் விளைவிக்கக் கூடிய முறையில் நடவடிக்கை எடுக்க நேரிட்டபோதெல்லாம் - தேளோ, பூரானோ, ஜலமண்டலியோ வந்து பயமுறுத்தியது. விஷ ஜந்து எதுவும் அவரைக் கடிக்கவோ கொட்டவோ இல்லை. அதுவரையில் அதற்குத் தனது மனைவியின் பிரார்த்தனையும், தனது நல்லதனமும்தான் காரணம் என்று நம்பினார் அவர்.

"இதுவரை தீங்கு எதுவும் ஏற்படவில்லை என்பதனால் இனியும் தீமை விளையாது என்று தெம்பாகத் திரிய முடியாது. -ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியம்" என்று நினைத்தார் அவர்.

இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாதப் பிள்ளை உத்தியோகத் தோரணையில் பண்ணைக்காடு வட்டாரத்தை 'இன்ஸ்பெக்ட்'செய்யத் தேதி குறித்திருந்தார். அதைப் பண்ணையாருக்கும் அறிவித்திருந்தார்.

இன்ஸ்பெக்டர் தன்னுடைய வீட்டிலேயே தங்கலாம்; சகல வசதிகளும் செய்து தர முடியும்; மறுநாள் வேட்டைக்குப் போகலாம் என்று பண்ணையார் தெரிவித்தார்,ஓர் ஆள் மூலம்.

'எல்லைக்குநாத பிள்ளை இப்பொழுது இன்ஸ்பெக்டர் தோரணையில் வருகிறார். அதனால் பண்ணையாரின் அதிதியாகத் தங்க முடியாது, பரிசோதனைகளில் ஈடுபட்டுத் திருட்டுக் கேஸ்களைக் கண்டு பிடிப்பதுதான் இன்ஸ்பெக்டர் கலந்துகொள்ளக் கூடிய வேட்டை. மலை அணிலையும், பழந்தின்னி வெளவாலையும், முயல்களையும், வக்கா கொக்கு, குருவிகளையும் கொல்லுகிற வேட்டை எல்லைக்குநாதனுக்குப் பிடிக்காது என்று எழுதி அனுப்பிவிட்டார் பிள்ளை.

அவர் பிரயாணத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். சேவகள் இசக்கித் தேவர் பூட்ஸ்களைக் தட்டித் துடைத்