பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுப் பசி எடுத்துத் திரிந்தான் அவன். அது அனுவாக ஞானத்தைக் கிரகிக்க வேண்டியிருந்தது அந்த மனிதனின் நிலை. மலர்தோறும் சென்று சென்று தேன் சேகரிக்கும் ஈயைப் போல், அவன் புத்தகம் புத்தகமாகக் கத்ருக வேண்டி யிருந்தது. ஒன்றின்மேல் ஒன்முகக் கற்களே அடுக்கிப் பலமான சுவர் எழுப்ப நேர்வது போலவே, சிறிது சிறிதாகச் சேர்த்துத்தான் அறிவைப் பலப்படுத்த வேண்டியிருந்தது. தேகத்தில் உறுத்தும் சிறு துளியின் வேதனையைச் சகித்துச் சகித்து கல் முத்தைப் பிறப்பிக் கிற சிப்பிப் புழுவைப் போல், அவன் ஞானமுத்தைப் பெறுவதற்காக எவ்வளவோ வேதனைப் பட்டாக வேண்டி யிருந்தது. முத்துக்களைச் சேகரிக்க ஆழ்கடலினுள் முக் குளிக்கத் துணிகிறவர்களைப் போலவே, அறிஞர்களும், சிந்தனையாளர்களும், ஞானிகளும், முன்னுேர்களும் சிதறி விட்டிருந்த அனுபவ மணிகளைப் பெற ஞானக் கடலிலே ாக்க வேண்டியிருந்தது. கரும்பாறைகளிடையே ஒளிக்கோடுகள் போல் தெளியும் தங்க ரேகைகளைக் கண்டு அங்கு பதுங்கிக் கிடக்கும் பொன்னைப் பெயர்த் தெடுக்கப் பாடுபடுகிற தொழிலாளிகளேப் போலத்தான், அவனும் ஞானச் சுரங்கத்திலே ஒவ்வொரு கணமும் ஒயாது உழைக்க வேண்டியிருந்தது. -