பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல முத்து 85 பொறக்க தோம் அப்படி என்று தேற்றிக் கொள்வாள் தாய, நாச்சியாருக்கும் கல்யாணம் நடக்கத்தான் செய் தது. நல்ல இடத்துச் சம்பந்தம்தான். சொத்துச் சுக மெல்லாம் இருக்கிறபோது, ரொக்கம் நகை உண்ட பாத்திரங்கள் என்று பணத்தை அள்ளிக்கொடுக்கிறதுடன் கில்லாது பெண் பேருக்கு ஏராளமான கிலபுலன்களையும் எழுதி வைக்க முன் வருகிறபோது, பண்னே யார் வீட்டுச் சம்பந்தம்தானு கிடைக்காது போய்விடும் ராஜா மகன் கூட வீட்டு மாப்பிள்ளேயாக வந்து இறங்க முடியுமே! அப்படி ராஜா மகன் மருமகப்பிள்ளையாக வந்து சேர வில்லையே என்ருல், அதற்குத் திருநெல்வேலி ஜில்லா லே- அதிலும் பூரீமான் இளையபெருமாள் பிள்ளை யவர்களின் இனத்திலே-ராஜா மகன் யாரும் இல்லாதது தான் கார்னமே தவிர வேறல்ல. அதனுல் என்ன கெட்டுப் போயிற்று பண்ணையார் வெயிலுகந்தநாதர் ஒரு ராஜா மாதிரித்தான். தனக்குத் தானே ராஜா என்பதைச் சொல்லவில்லை. அக்குலத்திற்கே தனி ராஜா அவர். அத்துடன் அந்த ஊருக்கும் ராஜா தான். அவர் ஆக்கினைகள் செல்லுபடியாகும் அங்கே. அவர் பெயருக்கு ஒரு அந்தஸ்து, மதிப்பு, பயம், பக்தி எல்லாமிருந்தன. ஆகவே அவர் தெருவில் உட்கார்த்து போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பற்றி யாரும் பேச்சு மூச்சு'காட்டப்படாது. அப்படிப் பேசிக் குறைகூறிக் கொண்டால், அது அவர் காதுக்கு எட்டக் கூடாது. அதுதான் முக்கியம். அக்த ஊர்ஜனக் களால் இம் முக்கிய விதியைக்கூடவா அனுஷ்டிக்க முடி யாது! பண்ணையாருக்கு வாழ்க்கைக் குறைவு எதுவுமில்லை. ஆலுைம் அவருக்கு வருத்தம் வருத்தம்தான் குலவிளக் காக வந்த மனைவி நோய் கொடியில்லா