பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல முத்து 9 | ஏழெட்டு மாசம் கழிச்சு நான் இங்கே திரும்பி வரும் போது முத்து எப்படி யிருக்கும் பாருங்க” என்ருள். அவளது ஆடும் கண்களில், துடிக்கும் உதடுகளில் விழிபதித்துக் கிரங்கியிருந்த பண்ணே யாருக்கு அவள் பேச்சில் சூது இல்லை என்று பட்டது. அப்படியே செய்யலாமே!’ என்ருர். "அப்போ இந்த மாலையை நான் போட்டுக் கொள்ள லாமா? என்று ஆசையுடன் வினவினுள் நாச்சியாரம்மா. ஆகா என்று தலையசைத்தாள் நாடே டிப் பெண். அவள் போவதற்கு முன்பு பண்ணையார் அவள் பெயரை விசாரித்தறியத் தவறவில்லை. பெயர் சிங்காரம் என்று சொன்னுள் அவள். சிங்காரிக்கு ஏற்ற பெயர்தான் என கினைத்து மகிழ்ந்து போளுர் அவர். பண்ணையார் வெயிலுகந்தகாத பிள்ளை திடீரெனவந்து போன கூத்தாடிப் பெண்ணே மறந்துவிடவில்லை. அவர் மனைவி அணிந்துகொண்ட முத்து மாலை மறந்து போகும் படி விடவுமில்லை. பளபளவென மின்னிய முத்துமாலை ஒன்றிரு மாதங்களிலேயே ஒளி குறைந்துவிட்டதாகக் தோன்றியது அவருக்கு. முதலில் அது வெறும் கினப்பு தான் என்று எண்ணித் தன்னையே ஏமாற்றிக் கொள்ள முயன்ருர் அவர். ஆனுலும் உண்மை கண்களை உறுத்தி நெஞ்சைக் குத்திக் குடைந்தது. காலப் போக்கிலே முத்துமாலை மங்கி, நாச்சியார் முதன் முதலில் அணிந்திருந்த மாலை போலவே மாறி விட்டது. பண்ணையாருக்கு எவ்வளவோ வருத்தம். அவள் ஏமாற்றி யிருப்பாளோ என்ற சந்தேகமும் கூட. சே, அப்படி கினைப்பதே தப்பு. கன்முகக் கவனித் துப் பார்த்துத் தானே மாற்றினேன் என்று தன்னையே கடிந்து கொள்வார் அவர் அவள் சொல்லிவிட்டுப் போன