பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வளர்ப்பு மகள்

இடுப்பில், இருப்பது தெரியாமல் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து, அவள் கண்களைத் துடைத்துக்கொண்டாள். அப்போதும் துக்கத்தைத் துடைக்க முடியாமல், தன் தொண்டையைப் பிடித்துக் கொண்டாள்.

மல்லிகா, தன்னை மறப்பதற்காக, அந்த ஏழைக் குடித்தனக்காரர்களை அதிகமாக நினைத்து, சேவையில் செயல்பட்டாள்.

ரமணனை, இரண்டு நாள்களாகக் காணவில்லை. அவளுக்கு அது ஆச்சரியமாகவும், ஆனந்தமான ஆறுதலாகவும் இருந்தது.


18

ஒவ்வொரு வாரமும் ஒரு குடித்தனப் பெண், பொதுத் தளத்தைப் பெருக்கி, மதில்போல் விளங்கும் 'காவாயைக்' கழுவி, குழாயடியில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றி, குளியலறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். காலையிலும், மாலையிலும் செய்ய வேண்டிய வேலை இது. இதற்கு 'முறைவாசல்' என்று பெயர்.

ஒருநாள், செல்லம்மாவின் 'முறை' வாசல். அவள், மார்க்கெட்டுக்குப் போய்விட்டாள். சந்திரா, தன்னைப் பார்க்க வந்த புருஷனை வழியனுப்ப பஸ்நிலையத்திற்குப் போய்விட்டாள். இதர பிள்ளைகள் எங்கேயோ போய்விட்டன.

மல்லிகா, அந்த மாலைப்பொழுதில், குடித்தனக்காரப் பெண்களுடன், ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். கால்வாய் நீர் வழிந்து கொண்டிருந்தது. களத்தில் தூசிகள் படிந்து கிடந்தன. மார்க்கெட்டுக்குப் போன செல்லம்மா, உடனே திரும்பிவிடுவாள் என்பதும், திரும்பிய உடனேயே, கால்வாயைக் கழுவி, தளத்தைத் தெளித்து, சகல வேலையையும் செய்துவிடுவாள் என்பதும், வீட்டுக்காரிக்குத் தெரியும். தெரிந்துகொண்டே, அவள் தெரியாதவள்போல சீண்டினாள். மாடியில் நின்றுகொண்டே போர்ப் பிரகடனம் செய்தாள்.

"பேமானி ஜனங்க முறைவாசல் செய்யாமல் போனால் என்ன அர்த்தம்? இருந்தால் ஒழுங்கா இருக்கணும். இல்லாவிட்டால் எதுக்கு இருக்கணும்? சுத்தத்தோட அருமை இவங்களுக்கு எப்படித் தெரியும்? தெரிந்திருந்தால் இப்படி இருக்க மாட்டாங்களே. இன்னைக்கு அந்தக் கிழவி வரட்டும்... தூ... சீ... சே..."

மல்லிகா, சக பெண்களைப் பார்த்தாள். அவர்கள். தங்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/100&oldid=1133939" இலிருந்து மீள்விக்கப்பட்டது