பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வளர்ப்பு மகள்

வீட்டுக்காரிக்கு ஆணவப் பேய், ஆத்திரமாகியது. எப்படி கெடக்கிறதுகள் எப்படி பேசுதுங்க! இதுவரைக்கும், 'ஊட்டுக்காரம்மா. ஊட்டுக்காரம்மா'ன்னு வார்த்தைக்கு வார்த்தை பணிவோடு பேசுற சனியன்கள் எப்படிப்பேசுறது பாருங்க! இவள்களை இப்படியே விட்டு வைக்கப் படாது. முளையிலேயே கிள்ளணும். முளையோடு கிள்ளணும்.

வீட்டுக்காரி, அவர்களைப் கிள்ளுவதுபோல் பேசினாள்.

"இது நல்லா இல்லை. சொல்லிவிட்டேன். கூட்டமா நின்று, எதிர்த்துப் பேசுற அளவுக்கு தெனாவட்டா? மரியாதையா எல்லாரும் காலி பண்ணிடுங்கோ. அவளைப் பேசினால், உங்களுக்கு என்ன வந்துட்டுது?"

ராக்கம்மா, சற்று உரக்கவே பேசினாள் "மல்லிகாவை பேசினால், எங்களைப் பேசினது மாதிரி. எங்களைப் பேசினால் மல்லிகாவைப் பேசினது மாதிரி...!"

"யூனியன் போடுறீங்களா?"

"அப்ட்டித்தான் வச்சுக்கோயேன்."

"என்னடி நீங்க? உங்க மனசுல என்னதான் நினைக்கிறீங்க? உங்க ஒற்றுமைக்கு பணியுறவள் நானுல்ல. நாளைக்கே வீட்டை காலி பண்ணியாகணும் துடப்புக் கட்டை மூஞ்சிங்க வந்துட்டாளுங்க"

"டீ போட்டு பேசினே, செருப்பு பிஞ்சிடும்."

"என்னடி சொன்னே? இன்னொரு தடவை சொல்லுடி"

இப்போது இன்னொருத்தி சவாலிட்டாள்.

"கீழே இறங்குடி கஸ்மாலம் கீழே இறங்குறியா, நானு மேல வரட்டுமா... இன்னொருவாட்டி துடைப்பக்கட்டைன்னு சொல்லுடி பார்க்கலாம். உன்ன கட்டையால சாத்தாட்டால், நானு ஹார்பார் கந்தசாமியோட சம்சாரம் இல்ல. கஸ்மால முண்டைக்கு 'வாய்வு' வந்தாலும் வந்துது, இந்த வீடே கஸ்மாலமா பூட்டுது... "மல்லிகா! நீ முறவாசல் பண்ணாண்டாம் துடப்பத்தைக் கீழே போடு, நீ அந்த துடப்பத்த கீழே எறியாட்டால், எங்களை அதனால் அடிக்கிறதுக்குச் சமானம். நீ கிளின் பண்ண வேண்டாம். அந்த ராங்கிக்காரி செய்றதை செய்துக்கட்டும்"

"போனால் போகுதுன்னு. பொறுத்துப் பொறுத்துப் போனால், கடைசில. எங்க கண்ணாட்டியையே பேசுறாள் உன்னை இதுவரைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/102&oldid=1134130" இலிருந்து மீள்விக்கப்பட்டது