பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு.சமுத்திரம்

91

ஆம்புளையாக இருந்தாலும் பரவாயில்லை என்று மேலும் நினைத்து, பயந்துவிட்டவர்கள்போல். தலைகளை கட்டாயப் படுத்திக் கீழே போட்டுக் கொண்டார்கள். தகர டப்பா, தேர்தலில் வெற்றி பெற்று விட்டவர்போல், மனைவியிடம், 'டிபன்' மன்றாடாமலே கிடைக்கும் என்று நினைத்து, அந்த வேகத்திலேயே, மாடிக்குப் போய்விட்டார். 'குடித்தனப்' பெண்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

இதற்குள் மல்லிகாவின் அம்மா செல்லம்மா வந்துவிட்டாள். நடந்த விவரத்தைக் கேள்விப்பட்டதும், இந்தப் பெண்களிடம் "அய்யோ ஆம்புளைங்களுக்கு தெரிய வேண்டாம். அப்புறம் எங்க வீட்டுக்காரரை கட்டுப்படுத்த முடியாது. என் மகன் பரமசிவம், ஒரே ஆட்டமாய் ஆடுவான்... விஷயம் நம்மோடேயே இருக்கட்டும் என்று சொல்லிக்கொண்டு, முறைவாசல் செய்யப் போனாள். வீட்டுக்காரி மாடியில் இருந்தே கத்தினாள்.

"செல்லம்மா உன் பொண்ணை அடக்கிவை, செட்டு சேர்த்துக்கிட்டு கலாட்டா பண்றாள்... இந்த பருப்பு இங்கே வேகாது... ஜாக்கிரதை."

செல்லம்மா அவளைப் பாராமல், அவள் பேசுவதுவரைக்கும் துடைப்பத்தையே பார்த்தாள். பிறகு, செய்ய வேண்டிய வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.


19

இரவு வந்தது. வேலைக்குக் சென்ற எல்லோருமே வந்துவிட்டார்கள்.

வெளியே உள்ள களத்தில் பாய்விரித்து, உட்கார்ந்துகொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். மல்லிகா, சந்திரா. ராக்கம்மா முதலியவர்கள் இன்னொரு பக்கத்தில் கும்பலாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பெருமாளும் இருந்தார்.

"என்ன நாய்க்கரே... எத்தன நாளைக்கு... இந்த சைக்கிள் ரிக்க்ஷாவை வச்சிக்கிட்டு அவஸ்தப்படப் போறீக? பேசாம ஒரு ஆட்டோ ரிக்க்ஷா வாங்கப்படாதா?”

"ரிக்ஷா மேல இருக்க 'டாப்பையே' சேஞ்ச் பண்ண முடியல... ஆட்டோவுக்கு காசுக்கு எங்க போறது? கேக்கேன்னு நீங்க தப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/105&oldid=1134154" இலிருந்து மீள்விக்கப்பட்டது