பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

93

இவர்களுக்கு. நாம் யாரென்று காட்டனும் ஒருத்தியையாவது தொலைத்துக் கட்டணும் மல்லிகா சிக்கினால்... நல்லது.

இரண்டு நாட்களில், ரமணன் வந்துவிட்டான். அவனைக் காணாமல் கண்ணீர்விட்டு, கலங்கிக் கொண்டிருக்கும் மல்லிகாவை நிம்மதியில் ஆழ்த்துவதுபோல் வந்துவிட்டான். அதேசமயம். தான் எழுதிய கடிதத்தை அவள் யாரிடமாவது காட்டி, நிலைமை எக்கச்சக்கமாக ஆகியிருக்குமோ என்று உள்ளுர உதறலுடன் வந்தான். எல்லோரும் உதாசீனம் செய்ததில் அவனுக்குச் சந்தோஷம். மல்லிகா சொல்லவில்லை. ஏன் மல்லிகா சொல்லவில்லை? இன்றைக்கு அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும். எப்படியாவது...

மத்தியான வேளை. 'ஹார்பார்' கந்தசாமி, வேலைக்குப் போகவில்லை. அங்கே வேலைநிறுத்தமாம். படுத்துக் கிடந்தான்.

மல்லிகா, அவன் மனைவிக்கும், இதர பெண்களுக்கும், சிலேட்டில், 'க, ங, ச' வை எழுதிக் காட்டிவிட்டு, பிறகு ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக்காட்டிக் கொண்டிருந்தாள். இட்லி ஆயாவும் "பலமா படி குயந்தே... ஆயா காதுல நுழையல..." என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டிருந்தாள்.

வீட்டுக்காரி பார்த்தாள். பாடத்தைக் கேட்டாள். அவளும், மல்லிகாவைப் போல். 'பாடம்' புகட்ட நினைத்தாள். திடீரென்று ரேடியோவைப் போட்டாள். பலமாக அதைக் கத்தவிட்டாள். அவள் படிப்பது கேட்காதபடி உச்ச நிலையில் வைத்தாள். எல்லாப் பெண்களும், முணுமுணுத்துக் கொண்டார்களே தவிர, அவளை முறைக்கவில்லை.

மல்லிகா. சலிப்போடு எழுந்தாள். எழுந்தவள். நடைவாசல் பக்கமாய் போனாள். எதிரே, ரமணன் வந்து கொண்டிருப்பது தெரியாமல் போய்விட்டாள். இளித்துக்கொண்டே வந்த ரமணன், அவளிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை. எப்படி நடந்துகொண்டானோ... புரியவில்லை. திடீரென்று மல்லிகா கத்தினாள்.

"முட்டாள் என்னைப் பற்றி என்னடா நினைத்தே? எருமை மாடு. செருப்பு பிஞ்சிடும்... ராஸ்கல்..."

எல்லாப் பெண்களும் அங்கே ஓடினார்கள். ரமணன் எந்தப் பக்கமும் ஓட முடியாமல், ஒளியவும் முடியாமல், எதிர்பார்த்த இனிமை, எருக்கம்பால் போல் அரிக்க திணறிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்களைப் பார்த்ததும் மல்லிகா விம்மினாள். இதற்குள். செல்லம்மாவும். சந்திராவும் பதறிக்கொண்டே வந்தார்கள். 'ஹார்பார்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/107&oldid=1134163" இலிருந்து மீள்விக்கப்பட்டது