பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வளர்ப்பு மகள்

கந்தசாமியும். கண்ணைக் கசக்கிக்கொண்டே வந்தான். ஓடப்போன ரமணனை, ஒருத்தி பிடித்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்காரி இறங்கிக் கொண்டிருந்தாள்.

"என்னம்மா.. என்ன பண்ணினான்..."

மல்லிகாவால், முதலில் பேச முடியவில்லை. முயன்றாலும் முடியவில்லை. திக்கித் திணறிவிட்டு, துள்ளும் வெட்டுக்கிளிபோல், விட்டு விட்டுப் பேசினாள். பிறகு வேகமாகப் பேசினாள்.

"இவன்... இந்த முட்டாள்... என் கையைப் பிடிச்சுக்கிட்டு பதில் லட்டர் எழுதிட்டியா'ன்னு கேக்குறான். இரண்டு நாளைக்கு முன்னால... ஒரு லட்டர் கொடுத்தான். நான் படிக்காமலே கிழிச்சிட்டேன். அநாவசியமான ரகளை வேண்டாமுன்னு சும்மா இருந்துட்டேன். இன்றைக்குக் காலையில்கூட இவனைப் பார்த்து காறித் துப்பினேன். (அவள் காறித் துப்பியதை ரமணன், அவள் தனக்கு முத்தம் கொடுக்கப் போவதாக சமிக்ஞை செய்வதாக நினைத்திருந்தான்.) அப்படியாவது இந்த தடிமாடு திருந்திடுவான்னு நினைத்தேன். கடைசியில, என் கையைப் பிடித்து"...

மல்லிகா மேற்கொண்டு பேச முடியாமல் ஒப்பாரி போட்டே அழுதாள்.

"அப்பா... அம்மா... என்னை எதுக்காகப்பா இங்கே இருக்க வைக்கிறீங்க..? என்னை வந்து கூட்டிட்டுப் போங்கப்பா என்னை கையைப் பிடிக்கலாமுன்னு ஒரு காலிப் பயல் நினைக்கிற அளவுக்கு ஆயிட்டேனே... ஆயிட்டேனே.. அய்யோ... யாராவது என்னை... தியாகராய நகர்ல கொண்டு விட்டுடுங்களேன்"... "அப்பா... அம்மா என்னால இங்கே இருக்க முடியாதுப்பா... முடியாதும்மா... அம்மா... அம்மா..."

சுற்றி நின்ற பெண்களால், கோபத்தை அடக்க முடியவில்லை. ஒருத்தி ரமணனின் சட்டைக் காலரையும், இன்னொருத்தி, அவன் கழுத்தையும் பிடித்துக்கொண்டு, “ஏழைப் பொண்ணுன்னால் என்ன வேணுமுன்னாலும் செய்யலாம் என்கிற நெனைப்பாடா கஸ்மாலம் காண்டாமிருகம் கோயக்கண்ணா... இருக்க முடியாட்டி உன்னோட அக்காள இஸ்த்துக்க வேண்டியது தானடா..." என்று.சொல்லிக்கொண்டே பெண்கள். அவனை ஆளுக்கொரு பக்கமா இழுத்தபோது, ஹார்பார் கந்தசாமி, "ஒத்திக்கங்கமே..." என்று சொல்லிக்கொண்டே ரமணன்மீது பாய்ந்தான். பல பளுவான மூட்டைகளைத் துக்கும் அவன். அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/108&oldid=1134166" இலிருந்து மீள்விக்கப்பட்டது