பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வளர்ப்பு மகள்

"அய்யோ... போலீஸ் வந்து உன்னைக் கூட்டிக்கினு போனால் நான் இன்னா பண்ணுவேன்? ஜாமீனுக்குக்கூட ஆளுங்க இல்லியே போலீஸ்காரன் உதைப்பானே, உனக்கு வேற ஜூரமாச்சே, பூட்ஸ் காலால மிதிப்பானே."

"சும்மா இரும்மே. போலீஸ்னா கொம்பா..."

மல்லிகா. கந்தசாமியையே பார்த்தாள். போலீஸ்காரர்கள் உதைத்தாலும் பரவாயில்லை என்பதுபோல் அவன் தைரியமாக இருந்தான்.

"அண்ணா... அண்ணா..." என்று விம்மினாள் மல்லிகா. கந்தசாமி அதிர்ந்து போனான்.

"என்னம்மா... நீ... பச்சைக் குழந்தை மாதிரி... இப்போ இன்னாதான் நடந்துட்டுது? உன் பேரு. அனாவசியமாய் கெடுமேன்னுதான் அந்த கம்மனாட்டிய அத்தோட விட்டேன். அயாதம்மா... இந்தாயாரு, நீ அயுறதப் பாத்துட்டு... அம்மா அயுவது. அப்பால எனக்கும் கண்ணீர் வருது."

எல்லோரும், ஒருவித திடுக்கிடும் எதிர்பார்ப்புடன் இருந்தபோது, ஒரு டாக்சியில் இருந்து, இரண்டு போலீஸ்காரர்களும், சப்-இன்ஸ்பெக்டரும். வீட்டுக்காரியும், ரமணனும் இறங்கினார்கள். வீட்டுக்காரி "இவன்தான். இவள் காலரைப் பிடித்தாள். அதோ அவள் கழுத்தை நெரித்தாள். இந்த செல்லம்மாதான் தூண்டிவிட்டது. இவளத்தான் மொதல்ல உதைக்கணும்" என்றாள், இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு.

சப்-இன்ஸ்பெக்டர். பேசாமல் கோபத்தோடு நின்றபோது. போலீஸ்காரர்களில் ஒருவர். கந்தசாமியை நெருங்கினார்.

"ஏண்டா சோமாறி... நீ என்ன பெரிய ரவுடியா..."

"நான் பெரிய ரவுடியும் இல்ல. சின்ன ரவுடியும் இல்ல. சாதாரண மனுஷன் சார்."

"எதிர்த்தா பேசுறே கயிதே."

"உன்னை என்ன பண்றோம் பாரு. இந்தாப்பா, இவன் கையை மடக்கிக் கட்டு," என்றார் சப்-இன்ஸ்பெக்டர் கோபமாக.

ஒரு போலீஸ்காரர் கந்தசாமியின் கைகளை வளைத்துப் பிடிக்கப் போனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/110&oldid=1134176" இலிருந்து மீள்விக்கப்பட்டது