பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வளர்ப்பு மகள்

பேசாம திண்ணையிலேயே... இட்லி வடை போடு... நீ போட்டால்... திண்ணையிலே வழக்கமா உட்காருற ரெளடிப் பசங்களையும் பகைக்காமலே விரட்டிடலாமு'ன்னு சொன்னாரு... அந்த மவராசன்தான் கடைபோட காசு கூட கொடுத்தார். ஒன் நயினாவும் கண்டுக்கல... முப்பது முப்பத்தஞ்சு வருஷமா... இங்கேயே கடை போட்டிருக்கேன் குயந்தே... நீ காலி பண்ணச் சொல்றது நாயமா குயந்தே..."

'குயந்தே' இப்போது, கூப்பாடு போட்டது.

"ஒன் மனசில என்னதான் நினைச்சிக்கிட்டே... திண்ணைய... அசிங்கமா வைக்க முடியாது... மரியாதியா... இப்பவே கீழே இறங்கு... இறங்குறியா... இல்ல இறக்கட்டுமா?"

"இப்படிச் சொன்னா எப்படி குயந்தே... இந்த தள்ளாத வயசுல. எங்கே குயந்தே போவேன்..."

"எங்கேயாவது போ... எனக்கென்ன... தெருவுல போற நாய்க்கெல்லாம்... நான் இடம் பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா..."

"எனக்கு எதுக்கு மரியாதி கொடுக்காட்டாலும்... வயசுக்காவது மரியாதி கொடு குயந்தே... நாயி நரியின்னு வாய்க்கு வந்தபடி பேசாத குயந்தே... அப்புறம் ஒன் வாய்தான் அழுவிப் போயிடும் குயந்தே..."

"அந்த அளவுக்கு திமுறு வந்துட்டா ஒனக்கு... பாத்துப்புடலாம்..."

வீட்டுக்காரி, பயங்கரமாக பல்லைக் கடித்துக்கொண்டு, கோணியை அறுத்தாள். ஆயாவின் ஸ்டவ் அடுப்பை, தரதரவென்று இழுத்து, திண்ணைக்குக் கீழே போட்டாள். இந்த முயற்சியில், வாணலியில் கொதித்த எண்ணெய். ஆயாவில் கை காலில் விழுந்தது. அவள் சதையை வேக வைத்து கொதித்தது. ஆயா, வலி பொறுக்க முடியாமல் கத்தினாள்.

"அய்யோ.. மாரியாத்தா... இந்த அநியாயத்த கேட்க ஆளில்லையா... ஆளில்லையா? குயந்தே... வீட்டுக்கார குயந்தே... இந்த எண்ணெய எடுத்து என் மேல வாணுமுன்னாலும் கொட்டு... ஆனால். என்னோட பொயப்ப கெடுத்திடாத குயந்தே... கெடுத்திடாதே..."

வீட்டுக்காரி விடவில்லை. ஆயாவின் இட்லி தட்டையும் எடுத்துக் கீழே போட்டுவிட்டு. கண்ணாடிப் பாத்திரங்களையும் இறக்கிவிட்டு, ஆயாவின் கைகளைப் பிடித்து "மொதல்ல கீழே இறங்கு... ஒங்களுக்குல்லாம் வாயால சொன்னால் பத்தாது” என்று கீழே இழுத்தபோது, ராக்கம்மா வந்தாள். வீட்டுக்காரியின் கை போகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/114&oldid=1134193" இலிருந்து மீள்விக்கப்பட்டது