பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

109

கொண்டபோது. பெருமாளும் வக்கீலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

"காலேஜ்ல... இவங்க... சாரி... நான் படிக்கிற காலேஜ்ல இவங்களும் படித்தாங்க. ஆமாம். எதுக்காத காலேஜ் வரவில்லை? படிப்பை அரைகுறையாவா விடுவது?" என்று சரவணன் இழுத்தபோது, மல்லிகா சிறிது நிலை தடுமாறினாள். உதட்டைக் கடித்துக்கொண்டு அவனை சாய்வாகப் பார்த்தாள். பிறகு, "காலேஜ்தான் கண்ணுக்குள்ளேயே நிற்குது" என்றாள். "அவ்வளவு பெரிய கட்டிடத்தை எப்படியம்மா தாங்கிக்கிறே" என்று வக்கீல் 'விட்' அடித்தபோது, அவளை விடாமல் பார்த்த சரவணன் அவர் சொன்னதைப் புரிந்துகொண்டவன்போல், தலையை ஆட்டினான். அவளுக்கு அது அழகாகத் தோன்றியது.

பெருமாளும், மல்லிகாவும் எழுந்தார்கள். சரவணன் பஸ்நிலையம்வரை வந்து, அவர்களை வழியனுப்பினான். பெருமாள், அவனிடம் குழந்தை மாதிரி நடந்த விஷயங்களை, ஏற்ற இறக்கத்தோடு சொன்னார்.

பஸ் புறப்பட்டது. பெருமாள் அவனைப் பார்த்து, "நம்ம வீட்டுக்கு ஒரு தடவ வா தம்பி" என்றார்.

மல்லிகா "எங்க வீடு... சின்ன வீடு" என்று சொல்லிச் சிரித்தாள்.

"எனக்கு வீடு முக்கியமில்ல... வீட்டில் இருக்கிற ஆட்கள்தான் முக்கியம்" என்று சரவணன் விடைபெற்றான்.

பஸ் இருக்கையில் இருந்தபடி, திரும்பித் திரும்பிப் பார்த்த மல்லிகா, அப்பா தன்னையே கவனிப்பதுபோல் தெரிந்ததால், லேசாக நாணப்பட்டுக் கொண்டாள்.


22

அடிமேல் அடியடித்தால் அம்மியே நகரும்போது. சொக்கலிங்கத்தை சொக்க வைப்பது, மைத்துனர்மார்களுக்குச் சிரமமாகவில்லை. ஏற்கெனவே, சட்டாம்பட்டி இளம் பெண்ணுடன். தன்னை இணைத்துப் பார்த்து, லேசாகத் திருப்திப்பட்டுக் கொண்ட அவரிடம், "உமக்குன்னு ஒரு குழந்தை இருந்திருந்தால்... இந்த மல்லிகா மாதுரி நடக்குமா? தான் பெறணும் பிள்ளை... தன்னோட பிறக்கணும் பிறவி" என்று சொல்லும்போதெல்லாம். சொக்கலிங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/123&oldid=1134231" இலிருந்து மீள்விக்கப்பட்டது