பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வளர்ப்பு மகள்

"போங்கப்பா" என்று சிணுங்கி, மைத்துனன்மார்களின் வயிற்றில் நிஜமாகவே, 'கீச்சுக் கீச்சு' காட்டினார்.

பிறகு, ஒருசமயம் திருச்செந்தூர் கோவிலுக்குப் போகும் சாக்கில், அவரைச் சட்டாப்பட்டிக்குக் கூட்டிப்போய், பேச்சியம்மாவைக் காட்டினார்கள். "என்னை சித்திகிட்ட இருந்து காப்பாத்துங்க தாத்தா" என்பது மாதிரி பார்த்த பேச்சியின் பார்வையை, சொக்கு, காதல் சமிக்ஞையாக எடுத்துக் கொண்டார்.

அப்புறம் சென்னைக்கு வந்தபிறகு, சொக்கலிங்கமே "எனக்குன்னு ஒரு பிள்ளை பிறக்க வேண்டாமா..." என்று சொல்வதும், உடனே, மைத்துனன்மார்கள் அவருக்கு 'கீச்சுக் கீச்சு' காட்டுவதும், கடைப் பையன்களுக்கே, தங்களையே யாரோ 'கிச்சுக் கிச்சுக்' காட்டுவதுபோல் சிரிப்பைக் கொடுத்தது.

பார்வதிக்கு முதலில், அண்ணன்மார்களின் திட்டம் புரியவில்லை. அவர்களிடமே, அவள் சொன்னபோது "ராமன்... மல்லிகா இருந்தால்தான் உருப்படுவான். அவனை... சுவீகாரம் எடுத்தால், மச்சான் மண்டையைப் போட்ட உடனே கோவிந்தா. சட்டாம்பட்டிக்காரியைக் கட்டினால்... உனக்கு அடக்கமாய் இருப்பாள். கிராமத்துப் பொண்ணு பாரு" என்றார்கள்.

சொக்கலிங்கத்திற்கு, தன் சொந்தக்காரப் பெண்ணைக் கட்டிவிட்டால், அப்புறம் சொத்தை பரிபாலனம் செய்யலாம் என்று பார்வதியின் சின்ன அண்ணன் நினைத்தார்.

பெரிய அண்ணன், இதைப் புரிந்துகொண்டு "அது எப்படிடா?" என்றார். உடனே சின்னவர் "உன் பெண்ணை... என் மைத்துனன் என்ஜினியருக்கு முடிக்கலாமுன்னு இருக்கேன். இப்போதான் ‘எப்படி'ன்னு யோசிக்கிறேன்" என்றார். அதனால், எதிர்ப்பை அகற்றிக்கொண்டே "எப்போடா... அந்தக் கல்யாணத்தை வைக்கலாம். எப்போடா இந்தக் கல்யாணத்தை வைக்கலாம் என்றார்.பெரியவர். பொது எதிரியான மல்லிகாவைக் கழித்துக் கட்டியாகிவிட்டது. இன்னொரு பொது எதிரியான ராமனையும் கழட்டிவிட வேண்டும் என்ற பொது லட்சியம், அவர்களை ஒன்றுபடுத்தியது.

பார்வதி. இதைப் படிப்படியாகப் புரிந்துகொண்டாள். கணவனிடம். கதறிப் பார்த்தாள். அண்ணன்மார்களின் பாசம். வெறும் பாசாங்கு என்பதைப் புரியவைக்கப் பார்த்தாள். ஆனால், சொக்கலிங்கம். அவளிடமே பல தடவை "நான் எதுக்கு சொல்றேன்னா பேச்சி..." என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/124&oldid=1134232" இலிருந்து மீள்விக்கப்பட்டது