பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ΧΙ

படங்களை நினைத்துப் பார்த்தால், இப்போது கூட என் உடம்பு நடுங்குகிறது இந்த நினைவு போகும்வரை, உண்ண முடியவில்லை.

அந்த முனிவரின் மனைவி அகலிகையாவது, கல்லாகித் தப்பிவிட்டாள். ஆனால், 'கல்லானாலும் கணவன்' என்று நினைக்கும் நமது தமிழ்ப் பெண்கள்தான் நட மாடும் நோயாளிகளாய் மாறுகிறார்கள். கணவர்களின் பாவத்திற்கு சிலுவைச் சுமக்கிறார்கள் அகலிகையைப்போல், இந்தப் பெண்களால் பாலியல் நோயிக்கார கணவன்களுக்கு சாபம் கொடுக்க முடியவில்லை. சாபம் கிடக்கட்டும் - பாலியல் சந்தர்ப்பங்களை நிராகரிக்க இயலவில்லை. இந்த இயலாமையை உடைத்தெறியும் முயற்சியே, இந்த ‘இந்திரமயம்’.

காலப் பரிணாமம்

இந்த இரண்டு நாவல்களும் நோக்கிலும், போக்கிலும், நடையிலும் வித்தியாசமானவை. சந்திராவை நேர்கோட்டில் நடக்க வைத்தேன். அவளைப் பாலியல் பிரச்சனைகளுக்கு உட்படுத்த வில்லை. அப்படியே உட்படுத்தி இருந்தாலும் இந்திரமயத்தில் வரும் அளவிற்கான பிரச்சினைகளை அந்தக் காலக்கட்டத்தில் அவள் உள்வாங்கியிருக்கத் தேவையில்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், பலதரப்பு நட்பும் அவளையோ அவளுக்கு வருகின்ற கணவனையோ பாலியல் சிக்கல்களில் அதிகமாக உட்படுத்தியிருக்காது. ஆனால், இந்திரமயத்தில் வரும் சந்திரா, ஒரு வகையில் சந்திராவின் காலப் பரிணாமம். இன்னொரு வகையில் இன்றைய ஆடியோ, வீடியோ வர்த்தகக் கலாச்சாரச் சூழலின் தாக்கங்களாலும், வேரற்றக் குடும்பச் சூழலாலும் பாதிக்கப்படும் பெண் இனத்தின் பிரதிநிதி.

‘வளர்ப்பு மகள்’ நடை எளிமையானது, இனிமையானது. ஒரே கோட்டில். போகக் கூடியது. விரிவாகவும் விளக்கமாகவும், முற்றிலும் சுய அனுபவப் பின்னணியில் எழுதப்பட்டது. ஆனால் இந்திரமயமோ, பின்னோக்கிய உத்தியில் இலக்கியத்தரம் இருக்க வேண்டும் என்பதற்காக தப்பாகவோ, சரியாகவோ ஓரளவிற்கு எளிமையையும், இனிமையையும் பலிகொடுத்து எழுதப்பட்டது. கூடவே, பக்க கட்டுப்பாட்டைக் கருதி, மிக விரிவாக எழுத வேண்டிய நவீன காலப் பெண்ணியப் பிரச்சனையை, சுருக்கமாக எழுதியது, எனக்கே ஒரு குறையாகத் தெரிகிறது. இந்தக் குறுநாவலை ‘வளர்ப்பு மகள்’ அளவிற்கு பரந்த தளத்தில் எழுதியிருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், ‘இந்திரமயத்’ தளம், ‘வளர்ப்பு மகள்’ தளத்தைவிட அகலமானது, ஆழமானது. காரணம் வளர்ப்பு மகள் அத்திப் பூத்தது போல் ஒரு தனிப் பெண்ணின் பிரச்சனை... இதுவோ இன்றைய சராசரிப் பெண்களின் பிரச்சனை... ‘இந்திரமய’த்தை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/13&oldid=1133655" இலிருந்து மீள்விக்கப்பட்டது