பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வளர்ப்பு மகள்

சாகணுமுன்னு நான் சொன்னதாய் கோள் சொன்னாங்களாமே. சத்தியமாய் சொல்லுகிறேன்... உங்கள் சொத்துக்கு நான் ஆசைப்படல... அந்த பொருந்தாத கல்யாணத்தால.,, பேச்சியும்,,. என் தங்கை பார்வதியும் அவஸ்தப்படக்கூடாதுன்னுதான் நோட்டீஸ் அனுப்பினேன். மற்றபடி.."

சொக்கலிங்கம் சிரித்துப் பேசினார்.

"அதெல்லாம் எதுக்குடா பேசுற... ஆமாம்... உன்னை குடிக்கக்கூடாது... குதிரைகிட்ட போகக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருப்பேன். அப்போ. நான் சொல்லும்போது கேட்கல. இப்போ மல்லி சொல்லாமலே நிறுத்திட்டியாம் என்னடா நியாயம்..."

பெருமாள் மகிழ்ந்து போனார். சின்ன வயதிலேயே 'டா' போட்டுப் பேசியவர்கள். கல்யாணம் ஆனபிறகும் 'டா' போட்டவர்கள். சொக்கலிங்கம் பகையை மறந்துட்டார்.

"அந்தப் பெருமை உனக்குத்தானடா... மல்லி உன்னோட பொண்ணுதானடா..."

இருவரும், 'டாட்டா' காட்டாமல், 'டா' போட்டுப் பேசியதைக் கேட்ட பார்வதியின் அண்ணன்மார்கள், முகஞ் சுழித்தார்கள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்தால், அருமைத் தங்கை என்னாவது? பெரியவர். அதட்டிக் கூப்பிட்டார்.

"பார்வதி... கொஞ்சம் வெளியில் வாரீயா... உன்கிட்ட தனியாய் பேசணும்."

மல்லிகாவையே பார்த்துக் கொண்டிருந்த பாாவ்தி, எரிச்சலோடு பதிலளித்தாள். "நான் உயிரோட இருக்கும்போதே, இன்னொருத்திக்கு ஏற்பாடு பண்ணுனவங்க... என்ன அண்ணன்? என்ன தம்பி? நான் வெளியில வரவும் வேண்டாம். நீங்கள் உள்ளே நிற்கவும் வேண்டாம்."

அண்ணன்மார்கள் அதிர்ச்சியுடன் போனார்கள். சொக்கலிங்கம். அப்போதுதான் ஒரு மூலையில் ஒதுங்கி நின்ற சரவணனையும். ஒரு பெண் பட்டாளத்தையும் பார்த்துவிட்டு. மல்லிகாவை அர்த்தபுஷ்டியாகப் பார்த்தார்.

மல்லிகா நாணிக்கொண்டே "அவர் பெயர் சரவணன் என்னோட நண்பர். அவங்க... என்னோட அந்த வீட்டுல இருக்கிற சகோதரிங்க... அக்காளுங்க.."

சொக்கலிங்கம். சரவணனைப் பார்த்துவிட்டு பேசாமல் நின்று கொண்டிருந்த 'குடித்தனக்கார' பெண்களையும் பார்த்தார் மாயையால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/130&oldid=1134244" இலிருந்து மீள்விக்கப்பட்டது