பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வளர்ப்பு மகள்

பெருமாளும், மனைவி மக்களோடு வந்துவிட்டார். பரமசிவம் பயல் மட்டும் மாமாவை சங்கடத்துடன் பார்த்தான்.கால்மணி நேரத்தில், குடித்தனப் பெண்களும் வந்துவிட்டார்கள். கந்தசாமியின் மனைவி ராக்கம்மா, கண்ணீர் விட்டுக் கொண்டே வந்தாள். யாரது... அடடே... இட்லி ஆயாவா..

மல்லிகா, இட்லி ஆயாவை, நைலக்ஸ் புடவையோடு போய் நின்று, அணைத்துக் கொண்டாள். ஆயா, அங்கே வந்த சொக்கலிங்கத்திடம் "இந்தப் பிள்ளையாண்டான் தான் சொக்கலிங்கமா.. பெரியபாளையாத்தாகிட்டே.. ஒருவாட்டி போயிட்டு வா நாய்னா.. உனக்கு ஒண்ணும் வராது" என்றாள்.

பிறகு, மல்லிகாவின் காதோடு காதாக "நீ நல்லா இருப்பே குயந்தே... நீ... இங்கேயே இருக்கணுமுன்னு சொல்லத் தோணினாக்கூட... சொல்ல விரும்பல குயந்தே... ஏன்னா. நீ இருக்க வேண்டிய இடம் அதுதான் குயந்தே. ஆனால் அடிக்கடி வந்து... முகத்த காட்டிட்டுப் போ குயந்தே... எங்களை மறந்துடாதே குயந்தே... நீ மறக்கமாட்டே குயந்தே..."

'இட்லி' ஆயா தன் பொட்டல் கண்களைத் துடைத்துக் கொண்டாள் தன் மடியில் கொண்டு வந்திருந்த ஒரு இட்லியை எடுத்து, மல்லிகாவின் வாயில் ஊட்டினாள் மல்லிகா, ஆயாவையே பார்த்தாள். கடந்த நாற்பது வருடமாய், பாசத்தைப் பார்த்திருக்க மாட்டாளோ...

பெருமாள் 'சத்தம்' போட்டார்.

"ராகு காலம் வரப்போவுது. சீக்கிரம்... மல்லி... இன்னுமா பேசி முடிக்கலே, வண்டில ஏறும்மா..."

தயாராக நின்ற காரில், சொக்கலிங்கம் ஏறிக்கொண்டார். பார்வதியும் ஏறிக்கொண்டாள். மல்லிகா போவதற்காக கார் கதவைப் பிடித்துக்கொண்டே, டிரைவர் நின்றார்.

காருக்குள் போகப்போன மல்லிகா, 'இட்லி' ஆயாவைப் பார்த்தாள். 'பீடி சுத்தும்' காமாட்சியைப் பார்த்தாள், சைக்கிள் ரிக்ஷாக்காரர் மனைவி மாரியம்மாளைப் பார்த்தாள். அங்கே இல்லாத ராக்கம்மாவைப் பார்த்தாள். இவர்களை விட்டுவிட்டுப் போகக்கூடாது... இவர்களை செல்வத்தில்தான் என்னால் புரள வைக்க முடியல. அவர்கள் வறுமையால் வாடும்போது, துணையாகவாவது நிற்கணும்... வீட்டுக்காரி மீண்டும் இட்லி ஆயாவை இம்சை செய்யப் பார்க்காள்னு மாரியம்மாள் சொன்னாள். இந்த ராக்கம்மா வேற கஷ்டத்துல இருக்காள்... இவர்கள் கொடுமைப்படுத்தப் படாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/132&oldid=1134246" இலிருந்து மீள்விக்கப்பட்டது