பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

இந்திர மயம்

இவளது வகுப்புத்தோழிகளான இதே இந்த அனிதாவும் இவள் வாழ்க்கையில் திருப்புமுனையான டாக்டர் காயத்திரியும், நெருக்கமானவர்கள். ஒன்றாக படிப்பது, ஒன்றாக உறங்குவது, ஒன்றாக திரிவது ஆகிய அத்தனை செயல்களிலும் ஒன்றாக ஈடுபட்டவர்கள். இதனால்தான், கல்லூரி மாணவர்கள், இவள்களுக்கு "திரி கேர்ல் மஸ்கட்டியர்ஸ்' என்று வக்கணை வைத்தார்கள்.

அப்போது பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கோபால், தங்கை அனிதாவை காலையில் கல்லுரியில் இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு, மாலையில் திரும்பும்போது ஏற்றிக் கொண்டுபோவான். இந்தச் சந்திராவும் காயத்திரியோடு சேர்ந்து, தோழியை மோட்டார் பைக்கில் இருந்து வரவேற்பதையும், வழியனுப்புவதையும் வாடிக்கையாக கொண்டவர்கள். சில சமயம் ஆபாசமாகப் பேசும் பறட்டை தலை மாணவர்களுக்கிடையே, கோபால், ஜென்டில்மேனாக தோன்றினான். இவளுக்கு அவனைப் பிடித்துப் போய்விட்டது. அவனும் இவளை தனித்துவமாகப் பார்த்தான். சாதாரண பழக்கந்தான்.

என்றாலும் கல்லூரி படிப்பு நிறைவுபெற்ற போது இவனைப் பிரியப்போகிறோமே என்ற வேதனை. இவளுக்கு அழுகையானது. இவனும், தோழிகள் எங்கேயோ போயிருந்த சமயத்தில், இவளை நெருங்கி 'என்னை மறந்திடாதிங்க' நான் இப்போ முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் இருப்பதற்கு நீங்களே காரணம்' என்றான். அவள் புரியாமல் பார்த்தபோது, 'நீங்கதான் என் அறிவை ஒப்புகொண்டவங்க என்னை கேம்பஸ் தேர்வுக்கு போகச் சொன்னவங்க... உங்களால்தான் நான் பெரிய வேலையில் இருக்கேன் எல்லாப் புகழும் உங்களுக்கே!" என்று சொல்லிவிட்டு அக்கம் பக்கம் பார்த்தான். பிறகு "ஒங்களால் முன்னேறிய எனக்கு கைக்கொடுக்கக் கூடாதா" என்று கண்சிமிட்டி கேட்டான். பிறகு அவளை நோக்கி தன் கைகளை நீட்டினான். அவளும் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு, அவன் கைவிரல்களோடு தனது கை விரல்களை பிணைத்துக்கொண்டாள். கையை எடுக்க மனமில்லாமலே அவனை நாணத்தோடு பார்த்தாள்.

இதற்குப் பிறகு, டவுனில் சந்திப்பதும், அவனோடு சிற்றுண்டி விடுதிகளுக்கு செல்வதும், அவனது செல்லத்தனமான தீண்டலை செல்லமாக சிணுங்கியபடியே அனுபவிப்பதும், அனுபவிக்க விடுவதும் வாடிக்கையாகி விட்டது. ஒருநாள் இருவரும் வழக்கம்போல் ஒரு விடுதியை நோக்கி நடந்தபோது, சந்திராவின் அண்ணன் அவர்களை வழிமறித்தான். அசல் சாராய வியாபாரி. அந்தத் தொழிலுக்கு ஏற்ற தாதா.. அவன், அதுவரை இரண்டு கொலைகளை செய்திருப்பதாகவும் கிராமத்தில் கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனாலும், தங்கையான இவளை உயிருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/140&oldid=1134342" இலிருந்து மீள்விக்கப்பட்டது