பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

இந்திர மயம்

தோன்றவில்லை. அதற்கு சமாதானம் கற்பித்தாள். ஒருவேளை இந்த அனிதா, தன்னை இவள் கள்ளத்தனமாய் பயன்படுத்திக் கொண்டதாக நியாயமாகவே நினைத்திருக்கலாம். அல்லது. உடம்பில் ஒரு முள் குத்துவதைக் கூட தன்னிடம் சொல்லும் தோழியான இவள், இந்தக் காதல் விவகாரத்தை சொல்லாமல் போனதில் ஆத்திரம் அடைந்திருக்கலாம். ஒருவர். இன்னொருவர் மீது வைக்கும் பாசமும், நேசமும் வஞ்சகமாய் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகம் வந்தால், பாசம் வைத்தவர் அந்தப் பாசத்தையே, அதே எதிர் விகிதாச்சாரத்தில் பகையாக மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்த இந்த சந்திரா, அவளை விட்டுப் பிடிக்க நினைத்தாள். ஆனால் அனிதா, சமாதானப்பட விரும்பாமல், இவளுடன் அடிக்கடி வம்புச் சண்டைகளுக்குத்தான் போனாள்.

இப்போது நீதிமன்ற சாட்சிக் கூண்டுக்குள் கிடந்த சந்திரா. பழைய வடுக்களை குடைந்து கொண்டிருந்தபோது ஒரு அதட்டல் கேட்டது. நீதிபதியின் பொறுமையின்மையைக் காட்டும் பெஞ்ச் கிளர்க்கின் அதட்டல்.

"உனக்காக எவ்வளவு நேரம் காதத்திருக்கது? உன் நாத்தினார் திருமதி. அனிதா பாண்டியன் சாட்சி சொன்னதுமாதிரி, நீ உன் கணவரை திட்டம் போட்டுத்தான் கைப்பற்றினியா? ஒரே வார்த்தையில் சொல். சும்மா தலையாட்டினால் எப்படி? வார்த்தையால் சொல்லு"

சந்திரா, 'இல்லை' என்று ஒற்றை வார்ததையை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாதவள் போல் தட்டுத் தடுமாறிப் பதிலாக்கி விட்டு முகத்தை மூடிக்கொள்கிறாள். மீண்டும் அதட்டல். "இது கோர்ட்டும்மா... உன் வீடில்ல... கையை, சட்டத்தில் இருந்து எடும்மா... அய்யாவுடைய அடுத்த கேள்வியை கவனமாய் கேட்டு உண்டு, இல்லை என்று மட்டும் பதில் சொல்"


3

நீதிபதி முதல் கேள்வி முடிந்துவிட்ட திருப்தியோடு, அடுத்த கேள்வியைக் கேட்டார்.

'நீங்கள் உங்கள் கணவரோடு முதல் ஆறு மாதகாலம் வரைக்குந்தான் சந்தோசமாய் இருந்ததாகவும். உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு, அவரோடு உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்றும் உங்கள் மாமியார் அன்னம்மா சாட்சியம் அளித்திருக்கிறார். உண்மையா? பொய்யா?'

சந்திரா இப்போது தனது புகுந்த வீட்டிற்குள் மானசீகமாகப் புகுந்து மாடி அறையில் கணவன் கோபாலோடு கட்டிப்புரண்டு கர்ப்பமாகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/142&oldid=1134344" இலிருந்து மீள்விக்கப்பட்டது