பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

131

ஆடித்திரிந்து, உலகெங்கும் லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கிய நோய் என் கவல ஆதங்கம் எல்லாம், எந்த தப்பும் செய்யாத உனக்கு- ஒரு லோலாயி ஆணுக்கு மனைவியான ஒரே ஒரு தவறால் இந்த நோய் வந்துவிட்டதே என்பது தான்."

சந்திரா, மாமியார் வந்து விடக்கூடாதே என்பதற்காக அறைக்கதவை தாழிட்டுவிட்டு, டாக்டர். காயத்திரியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். இவளது ஆடிய கைகள், காயத்திரியின் கைகளையும் ஆட்டின. கணவனின் நம்பிக்கை மோசடி ஒரு பக்கம்... அதனால் ஏற்பட்ட விளைவோ இன்னொரு பக்கம்.. இந்த பக்கங்களில் எந்த பக்கம் அவளை அதிகமாக நெருக்கியது என்பது அவளுக்கே தெரியாது. உடலும் உள்ளமும் ஒன்றோடு ஒன்று மல்லிட அவள் தட்டுத் தடுமாறிக் கேட்டாள். காயத்திரியை 'டி' போடும் தோழியாகப் பார்க்காமல் ஒரு டாக்டராகவே பார்த்துக் கேட்டாள். ஆரம்பத்தில் நாக்கு வாய்க்குள் வளைய வளைய வந்ததே தவிர வார்த்தைகளை பிரசவிக்கவில்லை. ஆனாலும், அவள் கேள்வி குறை பிரசவமாய் வாய்க்கு வெளியே வந்து விழுந்தது.

"இது... அதான் அந்த நோய் வந்தால் என்ன செய்யும்?"

"நானாய் சொல்லாமல் படக்கதையாய் சொல்ல வைக்கேன் என்னோடு வாடி"

டாக்டர் காயத்ரி, சந்திராவைக் கூட்டிக்கொண்டு லிப்டிற்கு முன்னால் வந்தாள். அவர்களோடு சேர்ந்து, அது கீழே போன போது சந்திராவிற்கு அதுவே பாடை போலவும் பாதாள புதைகுழிக்குள் தன்னை புதைக்கப் போவது போலவும் தோன்றியது.

இருவரும் இரண்டாவது மாடித்தளத்தில் இறங்குகிறார்கள். திரை அரங்கின் உள் வளாகம் போன்ற திறந்தவெளி அறையைப் பார்த்தபடியே நடக்கிறார்கள்... அங்கே ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த வரவேற்பு பெண்ணைத் தவிர, அத்தனைபேரும் நோயறைந்து காணப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் ஈ.சி.ஜி. ஈ.ஈ.ஜி, ஸ்கேனிங். எக்கோ என்று பல்வேறு சோதனைக் கருவிகளை எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்... நேற்று வரை ஆரோக்கியனாக தன்னை அனுமானித்து கொண்டவர். இப்போது அவரை இருதய நோயாளி என்று அடையாள படுத்தும் ஒரு சதுர காகிதத்தை வெறித்துப் பார்க்கிறார். ஒருவேளை, இன்னொருவர் பெயர் தனது பெயர் என்று தவறாக போடப்பட்டிருக்குமோ என்று நினைத்ததுபோல அந்த காகிதத்தில் தனது பெயர் பதிவையே உற்றுப் பார்க்கிறார். இன்னொருத்தி- படித்தவள். தனது கையில் உள்ள காகிதத்தோடு மேலே கைதுக்கி கும்பிடுகிறாள் உடனே, உடனடி பலனாய் எழுத்துக்கள் மாறி இருக்குமோ என்பது போல் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/145&oldid=1134347" இலிருந்து மீள்விக்கப்பட்டது