பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

133

டாக்டர் காந்தராஜ் விளக்கமளித்தார்:

"இதுதான் லட்சக்கணக்கான பேரை ஒழித்துக் கட்டிய பொம்பள சீக்கை தரும் கிருமி. முறைக்காதே காயத்திரி... இனிமே வேணுமின்னா ஆம்பள சீக்கை தரும் கிருமின்னு சொல்லலாம்."

டாக்டர். முத்துராஜ் இன்னொரு ஸ்லைடை போட்டு அதன் காட்சியை விளக்கினார்.

"இது என்னது என்று சொல்ல வேண்டியது இல்லை. இதிலே சிகப்பு வட்டத்துக்குள்ளே வெள்ளை தழும்பு மாதிரி இருக்குதே... இது உன் வீட்டுக்காரனுக்கு இருந்துதா? ஆபத்திற்கு வெட்கம் தோசமில்லை... சொல்லும்மா"

"எனக்கு தெரிந்த வரை அப்படி எதுவுமில்லை டாக்டரய்யா"

"அவசரத்தில் நீ பார்த்து இருக்க மாட்டே இது வந்து வந்து போகிற வட்டம். வலியோ நமச்சலோ கொடுக்காது. இதுதான் இந்த கிருமியோட நரித்தனம். இதனால உன் கணவன்கூட கவலைப்பட்டிருக்க மாட்டான். நெக்ஸ்ட்.. பாரு காயத்திரி! இது வகுப்பு மாதிரியும் எனக்கு அஸிஸ்டன்ட் இருக்கிறது மாதிரியும் பேசுறேன் பார். சரி இந்த ஸ்லைடை பாரும்மா. இதுல அந்த உறுப்பு எங்கே இருக்குதுன்னு கண்டுபிடிக்க முடியுமா? எப்படி வெள்ளைக் காளான் மாதிரி கொழுப்புக் கட்டியாகவும், கேரட் மாதிரி ரத்தக் கட்டியாகவும் சதைப் புதராக இருக்குது பாரு, இதுவும் உன் கணவனுக்கு வந்துட்டு வந்துட்டு போயிருக்கும். இப்படிபட்ட ஒருத்தனோடு உறவு கொள்கிற எவளுக்கும் இந்த நோய் வரும். உனக்கும் வந்திருக்கு"

"எனக்கு பயமா இருக்குடி..."

சந்திரா காயத்திரியுடன் உச்சிமுதல் பாதம் வரையில் ஒட்டிக்கொண்டாள். இதற்குள் இன்னொரு ஸ்லைடு வெண்திரையில் நிழல் உருவமாய் பதிந்தது. நிர்வாணமான உருவம் ஆண் என்றோ, பெண் என்றோ அடையாளப்படுத்த முடியாத சதைப் பிண்டங்கள் செஞ்சிவப்பான ரத்த வட்டங்கள்... அவற்றுக்குள் ஆழம் காண முடியாதது போன்ற வெள்ளை வெள்ளையான சதைப் பாளங்கள். ஆபாசத்தின் உச்சம் மிச்சம்மீதி வைக்காத அசிங்கம் இப்படித்தான் சந்திராவிற்குத் தோன்றியது. கண்களை மூடிக்கொண்டாள். டாக்டர் முத்துராஜ் ஒரு லெக்சரே அடித்தார்.

"என்றைக்கும் பிரச்சனையை சாய்வா பார்த்தால், அது நம்மைச் சாய்த்திடும் நேராய் கண்ணைத் திறந்து பாரும்மா இதுதான் மூன்றாவது கட்டம்.. நம்ம புராண பொய்களில் சில உண்மைகளும் கலப்படமாக கிடக்குது. உதாரணமாக, அகலிகையை கற்பழித்த இந்திரனுக்கு அவன் உடம்பு எங்கும் பெண் குறிகளாகும்படி அகலிகையின் கணவரான முனிவர் சாபம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/147&oldid=1134558" இலிருந்து மீள்விக்கப்பட்டது