பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

இந்திர மயம்

அமெரிக்காவில் வேலையில் சேரப் போக இருக்கும் டாக்டர் காய்த்திரிக்கு தனது தோழியை எப்படி ஆற்றுப்படுத்துவது என்று தெரியவில்லை. அவளைத் தூக்கி நிறுத்தி மார்போடு அணைத்துக் கொண்டாள்.

வள்ளலார் பாணியில் அரைக்கணத்தில் அண்டம் எல்லாம் ஏகியது போல். சந்திரா, நான்காண்டு கால நினைவு நெருப்பில் நாற்பது வினாடிகள் எரிந்து இருப்பாள். அந்த சூடு தாங்க முடியாமல், அவள் நிமிர்ந்தபோது, பெஞ்சு கிளார்க் நீதிபதி முணுமுணுத்துப் பேசியதை வெளிப்படையாக்கினார்.

"உனக்கு அபார்ஷன் ஆன பிறகு உன் கணவனோடு தாம்பத்திய உறவுக்கு மறுத்ததாக சாட்சி சொன்னதுக்கு. உண்டா... இல்லையா... ஒரே வரியில் பதில் சொல்!".

சந்திரா மேலும், கீழுமாய் தலையாட்டினாள். அப்படியும் பெஞ்சு கிளார்க் 'ஆமாவா' என்று கேட்ட போது அவள் உதடுகள் ஒன்றின் மேல் ஒன்று அடித்துக் கொண்டு கீழ் உதடு மேல் உதட்டில் இருந்து விலகி சிறிது முன்னால் வந்ததை கணக்கில் எடுத்தால், அவள் வாயில் இருந்து ஆமாம் என்ற வார்த்தை வெளிப்பட்டதாக அனுமானித்துக் கொள்ளலாம்.


4

இரண்டாவது கேள்விக்கும் வில்லங்கம் இல்லாமல் பதில் வாங்கிய திருப்தியோடு நீதிபதி மூன்றாவது கேள்விக்கு வந்தார்.

"உங்கள் கணவர் உங்களை ஒரு தடவை ஆசையோடு நெருங்கும்போது, நீங்கள் தாழிட்ட கதவை உடைக்காத குறையாய் திறந்து கீழ் தளத்திற்கு வந்ததாகவும். அப்படியும் அவர் கீழே இறங்கி வந்து உங்களை மேலே வரும்படி விடுத்த வேண்டுகோளை நிராகரித்து விட்டதாகவும். உங்கள் மாமனார் அருணாசலம் சாட்சி கூறி இருக்கிறார். உண்மையா? பொய்யா?"

சந்திரா. அந்த நீதிமன்றத்தின் ஒரு பகுதியை வீடாகவும் மறுபகுதியை மருத்துவமனையாவும் கற்பித்துக் கொண்டாள். அந்த மருத்துவமனையில் இருந்து ஆறாவது நாள் விடுவிக்கப்படுகிறாள். கணவனும், மாமியாரும் எஞ்சிய பணத்தைக் கட்டிவிட்டு அவளை மீட்டெடுக்கிறார்கள். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே, சந்திரா அவனிடம் சூடாகக் கேட்கப் போகிறாள். தாயாகிப் போன மாமியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/150&oldid=1134562" இலிருந்து மீள்விக்கப்பட்டது