பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

137

மனம் நோகக்கூடாது, என்பதற்காக மல்லாந்து தலை சாய்த்து கண்ணிரை பிடரி வழியாக விடுகிறாள்.

வீட்டுக்குத் திரும்பினால், இப்பொழுது வாயும் வயிருமாய் இருக்கும் இதே அனிதா ஒரு தடவை அபார்ஷன் வந்தால், அடுத்தடுத்து அதுதான் வருமாம். இதுக்குதான் ஜாதகம் பொருத்தம் பார்க்கிறது" என்று பெரியமனுஷி போல் குடி குடியாய் தலையாட்டும் தந்தையிடம் பேசுவது போல் ஏசினாள்.

கோபாலும், சந்திராவும். மாடி அறைக்கு வருகிறார்கள். அவன், அவள் வலது தோளில் கைபோட்டு, இடது தோளில் முகம் சாய்க்கிறான். "அனிதா ஒரு லூஸ் அவளைக் காதலிக்க ஆளில்லை என்கிற ஆத்திரத்தில் உன் மேல் பாய்கிறாள். அதோட அவள் இந்த வீட்டில் நிரந்தரமாக இருக்கப் போறவளும் இல்லை. அவளை பெரிசா எடுத்துக்காதே" என்கிறான்.

சந்திரா, அவன் பிடியில் இருந்து விடுபட்டு, இடைவெளியாய் விலகி நின்று. நேருக்கு நேராய் கேட்கிறாள். புலம்புகிறாள்.

"உங்களை நம்பி மோசம் போயிட்டேனே... நம்பவைத்து கழுத்தை அறுத்துட்டீங்களே... நீங்கள் ஒழுக்கமானவர், உண்மையானவர் என்று நம்பி மோசம் போயிட்டேனே..."

"ஏய்! சந்திரா என்ன ஆச்சு உனக்கு? பிரசவத்தில்தான் பெண்களுக்கு தற்காலிகமா சித்தம் கலங்கும்... அபார்ஷனிலுமா?"

"சும்மா பினாத்தாதீங்க. உங்களுக்கு எத்தனையோ பெண்களில் நானும் ஒருத்தி எவள் எவள் கிட்டல்லாமோ இருந்து எல்லா நோயையும் வாங்கி எனக்கு தந்திட்டீங்க."

"சும்மா உளறாதே.?"

"உளறல. ஒங்க உடம்புக்குள் இருக்கிற சிபிலிஸ் கிருமிகள் உங்களோட சுயரூபத்தை என் உடல் வழியாய் காட்டிக் கொடுத்திருக்கு. ஒரு வேளை எய்ட்ஸ் கூட இருக்கலாமாம்... எல்லாம் என் தலைவிதி.."

"சும்மா புருடா விடாதே... உனக்கு யார் சொன்னது?"

"காலேஜில் முதல் வருடம் எங்ககூட படிச்சாளே காய்த்திரி... இப்ப அவள் டாக்டர் எனக்கு சிகிச்சை அளித்தது அவள்தான்"

"குச்சிக் காலும் குச்சி கையுமாய் தொடப்பத்திற்கு துணி கட்டின மாதிரி இருப்பாளே... அந்தக் காய்த்திரியா? அவளுக்கு நான் அவளை சைட் அடிக்கலைன்னு அப்பவே கோபம். உன் மேல பொறாமை"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/151&oldid=1134563" இலிருந்து மீள்விக்கப்பட்டது