பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

139

"டாக்டரிடம் டெஸ்ட் செய்தேன். எனக்கு சிபிலிஸ் கிடையாது. வேணுமின்னா டாக்டர் முத்துராஜிடம் கூட்டிட்டுப் போ."

சந்திராவிற்குப் புரிந்துவிட்டது. ஆசாமி நோயை குணப்படுத்திவிட்டு அதை ஒப்புக்கொள்ளும் நேர்மைத் திறனின்றி பேசுகிறான். புறக்காரணங்களினால் இவரோடுதான் வாழ்ந்தாக வேண்டும். அந்த வகையில் சிபிலிஸ் போனதில் மகிழ்ச்சி. அது... அந்த எய்ட்ஸ் எனக்கு இல்லைன்னு காய்த்திரி சொல்லிட்டாள். ஆனால் இவருக்கு எய்ட்ஸ் இருக்காது என்பது என்ன நிச்சயம்?"

அந்த நிச்சயமில்லாத நிச்சயத்தை தோலுரித்துப் பார்பதற்காக ஒரு கேள்வி கேட்டாள்.

"எய்ட்ஸ் கிருமிக்கும் டெஸ்ட் செய்தீர்களா?"

கோபாலுக்கு முகம் அந்த கிருமி போலவே புதிய வேடம் போட்டது. நரம்புகள் புடைத்தன. கண்கள் கோணல்மாணலாக போயின. எய்ட்ஸ் டெஸ்ட் செய்ய அவனுக்குப் பயம். அந்தப் பயம் சந்திராவை பயமுறுத்துவதாய் உருமாறியது.

"என்ன நீ.. விட்டால் ரொம்பத்தான் போறே? இந்த நோயும் அந்த நோயும் உன்கிட்ட இருந்து எனக்கு ஏன் வந்திருக்கக்கூடாது?"

"அப்படி இல்லைன்னு உங்களுக்கே தெரியும்... சும்மா வீம்புக்குக் கேக்குறீங்க. நானும் வீம்புக்கு பதிலளிக்கேன். தகாத உறவுகளால் சன்மான்கள வாங்குன உங்களை நான் ஏற்றுக்கொள்வது மாதிரி, நான் கள்ள உறவு வைத்திருந்தாலும் என்னையும் நீங்க ஏத்துக்கலாமே. எனக்கு எய்ட்ஸ் டெஸ்ட்டுல அந்தக் கிருமி இல்லன்னு தெரிஞ்சிட்டுது. உங்களுக்கும் இல்லன்னா உங்களவிட நான்தான் அதிகமா சந்தோஷப்படுவேன். அப்போ குழந்தை பெத்துக்கலாம். இல்லாட்டி காண்டம் இருக்கவே இருக்குது. என் பாவத்தின் சம்பளமாக இந்த காண்டம் சலுகையை மட்டுமே உங்களுக்கு வழங்க முடியும். அதுவும் டெஸ்ட் முடிஞ்ச பிறகுதான். ஒரு ஆண் எப்படி இருந்தாலும், அவன் மனைவி அவனுக்கு உடலாலும் கட்டுப்படணும் என்று நினைக்கிறது இந்தக் காலத்தில் எடுபடாது."

"அப்போ நீ இந்த வீட்டவிட்டு வெளியேற வேண்டியது இருக்கும்."

"அதுக்கும் நான் தயார்... ஆனாலும் வெளியில் போய் நான் கெட்டுச் சீரழிந்தால், உத்தமபுத்திரனான உங்களுக்குத்தான் கெட்ட பெயர். அதனால நாலு மாதம் டைம் கொடுங்க. கம்ப்யூடர்ல டிடிபி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/153&oldid=1134589" இலிருந்து மீள்விக்கப்பட்டது