பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

141

பொம்பளதான் என்று மார் தட்டினார். இந்தச் செய்தி மருமகளுக்காக மட்டுமல்லாது மனைவிக்கும் என்பதுபோல் அவளையும் முறைத்தார்.

இதற்குள் கோபால் கீழ்நோக்கி ஓடிவந்தான். சந்திராவின் தலைமுடியை பிடித்திழுத்து "வாடி... வாடி..." என்று கத்தியபடியே படிமேல் கொண்டுவந்து அவளை மேல்நோக்கி இழுத்தான். உடனே, அத்தனை குடிவெறியிலும் அவன் தகப்பன் "டேய் அவள் அரிவாள் பக்கிரியோட தங்கைடா" என்று உளறிப் பேசியபோது, கோபால் பெட்டிப்பாம்பாய் ஆனதுபோல் அவளை விட்டுவிட்டு படியில் நெடுஞ்சாண் கிடையாய் படிந்தான். 'உன் அண்ணன் கிட்ட சொல்லிடாதே" என்பது மாதிரி அவளைப் பரிதாபமாக முகங்காட்டிப் பார்த்துக் கொண்டான்.

சந்திரா மாமியார் தோளில் சாய்ந்தாள். உடனே அவள், மருமகள் முதுகைத் தட்டிக்கொடுத்தாள். முகத்தைத் துடைத்து கையை ஈரப்படுத்தினாள். "நான் மாட்டியது மாதிரி நீயும் மாட்டிட்டியேம்மா" என்று அவளுக்கு மட்டும் கேட்பதுபோல் கிசுகிசுத்தாள். சந்திரா, திட்டவட்டமாகத் தெரிவித்தாள்.

"அத்தை இனிமேல் உங்ககூடத்தான் படுப்பேன்... மாடிக்குப் போகமாட்டேன்."

அதுக்கென்னம்மா... அதுக்கென்னம்மா... உன் இஷ்டம்."

நாவலுக்குள் இன்னும் கண்களை புதைக்காமல் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த அனிதா "எப்பா! முதல்ல உங்க பொண்டாட்டிய வீட்ட விட்டு துரத்துங்க. ஏன் அண்ணா உனக்கு வேற பொண்ணே கிடைக்காதா. பிடிக்காட்டி துரத்த வேண்டியதுதானே" என்று நாவலை வீசிப்போட்டு விட்டுக் கத்தினாள். அவளுக்கு மறைமுகமாக பதிலளிப்பதுபோல், சந்திரா பதிலளித்தாள்.

"நாலுமாதம் டைம் கொடுங்க அத்தே நானே போய்டுவேன்..."


5

சந்திரா, அந்த சண்டைக்காட்சிகளில் முன்னாலும் பின்னாலுமாய் மனதை சுழலவிட்டபோது, மீண்டும் பெஞ்சு கிளார்க், முன்னதாக நீதிபதி கேட்ட கேள்வியை இப்போது வர்ணனையோடு திருப்பிக் கேட்டார்.

"இப்படி சும்மா நின்றால்... என்னம்மா அர்த்தம்? உனக்கு அபார்ஷன் ஆனபிறகு நீ கணவனோடு தாம்பத்தியம் செய்ய மறுத்தியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/155&oldid=1134593" இலிருந்து மீள்விக்கப்பட்டது