பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

இந்திர மயம்

அணைத்துக் கொண்டார்கள். நீதி செயல்பாட்டுச் சமயத்தில் இந்த வழியாக நடந்திருந்தால் நடந்தவருக்கு நீதிமன்ற அவமதிப்பின் கீழ் சிறைவாசம் கிடைத்திருக்கும். இது தெரியாமலேயே, தாயும் மகளும் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டனர். ஒருகாலத்தில் குமிழ்ச் சிரிப்போடும் மரியாதையான பார்வையோடும் தோன்றிய தன் மகளின் கண்களையும் அந்த சிரிப்புக் குமிழிகளையும் காணாமல் தவித்த தாய், தனது கண்களை நீரில் மூழ்க வைத்து புலம்பினாள்.

"நான் பெத்த மவளே ஒரு புழுவை வழியில் பார்த்தாக் கூட விலகி நடப்பியே உன்னை இந்தக் கோலத்திலே பார்க்கேனே..."

சந்திரா, எதுவும் பேசவில்லை. தாயை இடுப்போடு சேர்த்து சிக்கென்று பிடித்துக் கொண்டாள். அவள் தோளில் முகம் சாய்த்து மெய்மறந்தாள். இருவரும், நீதிமன்ற வாசலைத் தாண்டி அறைச் சுவரில் சாய்ந்து கொண்டு அரைவட்டமாக நின்று கொண்டார்கள். உள்ளொடுங்கிய இரண்டு ஜோடிக் கண்களும் வெளிவரப் போவது போல் துடித்தன. உதடுகள் மேலும், கீழுமாக அசைந்தன. அப்போதுதான் பெற்றுப் போட்டது போல், தாய் மகளைப் பார்க்கிறாள். அப்போதுதான் பிறந்தது போல் மகள் மழலையாகிறாள்.

'உங்களைத்தான்' என்று ஒற்றைக் குரல் கேட்டு சந்திரா திரும்புகிறாள். அவளுக்கு மரியாதையான இடைவெளி கொடுத்து மார்த்தாண்டன் நிற்கிறான். தாய்ச் சிலுவையில் இருந்து மரித்தெழுந்தவள் போல், சந்திரா நிமிர்ந்து சீறினாள்.

"உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நம்மைப் பற்றிப் பேசுறதை நிருபிக்கிறதுக்காக வந்தீங்களா... உங்க வேலையை பார்த்துகிட்டு போங்களேன்..."

வந்தவன், அசையவில்லை. உள்முகமாய் ஏற்பட்ட அதிர்ச்சியை வெளிமுகப் படுத்தவில்லை. ஆணி அடித்தது போல் பேசுகிறான்.

"நான் ஒரு பாவமும் அறியாத நிரபராதி என்று உங்களுக்கே தெரியும். நீங்க சிறைக்கு போறதிலே நியாயம் இருக்கலாம். உங்களுக்காக நானும் சிறைக்கு போகணும் என்கிறதில் என்ன நியாயம்."

சந்திரா, ஓரடி முன்னால் நடந்து, அவனை அருகாமையில் பார்த்தாள். அந்த ஆறுதலில் அவன் கோபத்தைக் குறைத்து குரல் தாழ்த்திப் பேசினான்.

"உங்களுக்கும் உங்க கணவருக்கும் இடையே இருந்த பிரச்சனை எனக்கு இன்னும் தெரியாது. அதே சமயம். நீங்கள் சுயசாட்சி சொல்லாமலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/160&oldid=1134603" இலிருந்து மீள்விக்கப்பட்டது