பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

147

உங்கள் தரப்பு சாட்சிகள் பட்டியலை கொடுக்காமலும் இருப்பதிலிருந்து ஒங்களுடைய பிரச்சனையின் ஆழம் எனக்கு புரியது. போன வாய்தா வரைக்கும் உங்க நிலைமைதான் என் நிலைமையும் என் பணக்கார நண்பர்களோட நடத்தின நிறுவனத்தில் நான் மூலதனம் போடாத வொர்க்கிங் பாட்னராதான் இருந்தேன். அம்மாவோட பென்சனில்தான் படித்தேன். என்னை கைது செய்த அதிர்ச்சியில் ஏற்கனவே நோயாளியான என் அம்மாவிற்கு நோய் அடியோடு தீர்ந்து போச்சு. ஜூரம் அவங்க உடம்பில் உறைபனியாகி விட்டது. இது போதாதுன்னு நான் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதை சாக்காக வைத்து பங்காளியாகிப் போன நண்பர்கள் என்னை கம்பெனியில் இருந்து நீக்கிட்டாங்களாம். ஒருவன் கூட எட்டிப் பார்க்கல. அம்மாவுடைய ஈமச்சடங்கை பரோலில் போய் நடத்திவிட்டு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் நானும் உங்களை மாதிரிதான் இருந்தேன்."

"ஆனா சிறைக் கொடுமையை என்னால தாங்க முடியலை. கொசுக்கடிகளை விட மனுஷங்கடி பலமா இருக்கு ஒரு அறைக்குள்ளேயே ராத்திரி கடன்களை ஒரு சட்டியில் கழிக்கிறதை நினைத்தால் தாங்க முடியலை. நரகம் என்று ஒன்று இருந்தால் அது நான் இருக்கிற சிறையாகத்தான் இருக்கும் இந்த நரகத்திலிருந்து மீண்டாகனும்.. இது உங்க கையில தான் இருக்குது. இப்ப கோர்ட் மீண்டும் கூடும்போது.. நீதிபதி உங்களைப் பார்த்து கடைசியா நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க" என்று கேட்டார். அப்போ நீங்க நடந்ததை நடந்தபடி சொன்னா, உங்க தரப்பு சாட்சிகளை விசாரிக்க வேண்டுமுன்னு கேட்டால் தீர்ப்பின் போக்கு வேற மாதிரி இருக்கலாம். இதனால் உங்களுக்கு சீக்கிரமாய் விடுதலையும் கிடைக்கலாம். தயவு செய்து உங்களைக் காப்பாற்றி என்னையும் காப்பாற்றணும்.

சந்திராவும், மார்த்தாண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். தோழமை பகிர்வோ, துயரப் பகிர்வோ...

இதற்குள் உடை போட்ட பொம்மை போல் இருந்த சந்திராவின் மோவாயை தாய்க்காரி உள்ளங்கையில் ஏந்தியபடியே கெஞ்சினாள்.

"நடந்ததை சொல்லும்மா... அப்புறம் ஆண்டவன் இருக்கான்"

ஆரம்பத்தில் அந்த ஜோடியை வேடிக்கை பார்ப்பதற்காக சுற்றி நின்ற நான்கைந்து பேர், நோக்கத்தை மாற்றுகிறார்கள். ஒரே சமயத்தில் பலர் பேசுகிறார்கள். பேசப்போனவர். அடுத்தவர் பேசப் போகிறார் என்று மவுனம் காத்திருக்கிறார். பேசிக் கொண்டிருந்தவர். ஓர் உரத்த குரலுக்கு வழிவிடுகிறார். அந்த உரத்த குரல். இடைச் செறுகலாக வந்த இன்னொரு குரலைக் கையாட்டி தடுத்து ஒலிக்கிறது. அந்த மூவராலும் அந்த கூட்டத்திற்கே ஒரு தோழமை பண்பு ஏற்படுகிறது. அந்தத் தோழமை சொன்னது இப்படித்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/161&oldid=1134604" இலிருந்து மீள்விக்கப்பட்டது