பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

வளர்ப்பு மகள்

"போய் உடம்புல பட்டுச்சேலையை சுத்துடி."

மல்லிகா சிரித்துக்கொண்டே குளியலறைக்குள் போனாள். பார்வதி, உள்ளேபோய். ஒரு நாட்டுப் புடவையை தேடிப் பிடித்து எடுத்து சொக்கலிங்கத்திடம் தவறிப்போய் "மல்லிகாகிட்டே கொடுங்க" என்று சொல்லப் போனதற்காகச் சிரித்துக்கொண்டே, குளியலறைக்குப் போய் கதவின் இடுக்கில் அந்தப் புடவையை முன்பாதி உள்ளேயும். பின்பாதி வெளியேயுமாய் தொங்கப் போட்டுவிட்டு, சுய அலங்காரம் செய்துகொள்ள தனது தாம்பத்திய அறைக்குள் போனாள்.


2

சொக்கலிங்கம், டெலிபோனைச் சுழற்றினார்.

"அலோ... செட்டியாரா... காரு ரெடியா... பரவாயில்ல. அரைமணி நேரம் கழித்தே அனுப்புங்க. அப்புறம் வேளச்சேரி விவகாரம் பழம். நேர்ல பேசலாம். சரி. காரை அரை மணிக்கு அப்புறமாகவே அனுப்புங்க. மூவாயிரம் ரூபாய் குப்பன்கிட்டே கொடுத்து அனுப்புறேன். அதை முடிச்சிடுங்க. வச்சிடட்டுமா. வச்சிடுறேன்."

சொக்கலிங்கம் டெலிபோனை வைத்தபோது, பார்வதி கண்ணாடி பொருத்திய பீரோவைத் திறந்து. வைர நெக்லஸ், ஏழு பவுன் இரட்டைவடச் சங்கிலி முதலியவற்றைக் கழுத்திலும், நான்கைந்து தங்கக் காப்புகளை கைகளிலும், மூன்று மோதிரங்களை விரல்களிலும் போட்டுக் கொண்டாள். நகைகளைப் போடப்போட கல்யாண வீட்டிற்கு எப்போது போவோம் என்று அவளுக்கு அவசரம், ஆவேசமாகும் அளவிற்கு வளர்ந்தது.

குளித்துவிட்டு வந்த மல்லிகாவிற்கு பார்வதி தலைவாரி விட்டாள். "போங்கம்மா நான் குழந்தையில்லே... எனக்கும் கையிருக்கு" என்று அந்த கல்லூரிக்காரி சிணுங்கியபோது, பார்வதி "இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு எப்படி டிரஸ் பண்றது என்கிறதைவிட எப்படி எப்படிப் பண்ணாமல் இருக்கலாம் என்கிறதுதான் அதிகமாய்த் தெரியும். சும்மா தலையைக் கொடுடி... அப்படி இப்படி ஆட்டாதே..." என்று சொல்லிக்கொண்டு. அவளின் இடுப்பை இறுக்கிப் பிடித்துக்கொண்டே இரட்டைப் பின்னல் போட்டாள். பிறகு கண்ணுக்கு மை போட்டாள். அதன்பின் பீரோவைத் திறந்து நகைகளை நீட்டினாள்

மல்லிகா திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். எம்மா... முதுகில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/18&oldid=1133661" இலிருந்து மீள்விக்கப்பட்டது