பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வளர்ப்பு மகள்

பக்கத்திலேயே இருந்தபோதும், பசி, வயிற்றுக்கு வெளியேயே வந்தபோதும். ஒரு பேச்சை - அதுவும் உருப்படாத பேச்சைக் கேட்பது என்றால்...

செவிக்கு உணவு திகட்டியதால், வயிற்று உணவை தியாகம் செய்துவிட்டு, ஒருசிலர் வெளியே வந்தபோது. சொக்கலிங்கம் மனைவி-மகள் சகிதமாகக் காரில் இருந்து இறங்கினார்.

உள்ளே இருந்து ஓடிவந்த அவருடைய தங்கை செல்லம்மா. "வாங்கண்ணா... கொஞ்சம் முன்னாலேயே வரப்படாதா..." என்று கெஞ்சுவதுபோலக் கேட்டாள். அண்ணனின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

பார்வதியால் பொறுக்க முடியவில்லை. "இவரு என்ன மேடையிலயா உட்காரப் போறாரு சீக்கிரமாய் வாரதுக்கு" என்றபோது, மல்லிகா சிரித்துக்கொண்டே, "மேடையில் பேசுறவங்கதான் கடைசில வரணும். அப்பா... நீங்க லேட்டா வந்ததனால, தலைவரா ஆயிட்டிங்க அதனாலே மேடைல போய் உட்காரனும், இடம் இருந்தால்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

"ஆமாண்ணா... அவரு அப்போதே உங்களைப் பார்த்துக்கிட்டே இருந்தார்" என்றாள், செல்லம்மா.

செல்லம்மா அவர்களை வரவேற்பதுபோல், திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே முன்னால் நடக்க, மூவரும் உள்ளே போனார்கள். கூட்டத்தில் லேசான பரபரப்பு. சொக்கலிங்கத்தின் உதவி தேவைப்படலாம் என்று கருதிய இரண்டுபேரும், அவர் ஒரு காலத்தில் செய்த உதவியை இன்னும் நன்றியுடன் பாராட்டும் ஒருவரும், நாற்காலிகளில் இருந்து எழுந்தார்கள்.

சொக்கலிங்கம் குடும்பத்தினர் உட்கார்ந்தபோது, செல்லம்மா. அண்ணனைப் பெருமையாகப் பார்த்துக்கொண்டே கணவனிடம் போய். கெஞ்சினாள்.

"அண்ணன் வந்துட்டாரில்ல. போய், 'வாங்கத்தான்'னு ஒரு வார்த்தை கேளுங்க... போங்க."

"போடி! உன் அண்ணன்... தாலி கட்டுற நேரத்தில் வந்துட்டாரு பாரு... காலுல விழுந்து கும்பிடணும்! அவருகிட்ட பணம் இருந்தால் அவரு வரைக்கும். நான். ஒரு குதிரை காலுல கட்டுன பணத்துக்குட் பெறுமா...?"

"அவரு பணக்காரருன்னு உங்களை கூப்பிடச் சொல்லல. உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/26&oldid=1133670" இலிருந்து மீள்விக்கப்பட்டது