பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

17

எண்ணூரில் பத்து ஏக்கர் நிலம்... எல்லாம். கிண்டிக் குதிரை மாதிரி ஓடிட்டு. என்னோட முதலிரவு வெல்வெட் மெத்தை போட்ட கட்டிலில், பங்களா மாதிரி இருந்த வீட்டில் நடந்தது. ஆனால் என் பொண்ணுக்கு, கட்டிலுக்குப் பதிலாக வெறும் பாய்தான். பாயாவது பரவாயில்லை - அந்தப் பாய் விரிக்க இடம்கூட இல்லீயே என்ன செய்யலாம்? - கையில் ரூபாய் இருக்கு ஓர் ஏர்கண்டிஷன் லாட்ஜ் பார்க்கலாமா? சீச்சீ இந்த சின்னஞ்சிறுசுகளுக்கு அங்கே நடக்கிற விவரங்கள் தெரியக்கூடாது...'

பெருமாள், தலையைப் பிடிக்காத குறையாக, சிந்தித்துக்கொண்டு இருந்தார். மணமகனை ரசித்துக்கொண்டு இருந்த சந்திரா. திடீரென்று ஏதோ நினைவில் பட்டவளாய் வெளியே வந்து, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து. மாடிப் போர்ஷனில், டி.வி.காட்சியாக வாழும் வீட்டுக்கார அம்மாவுடன் பேசிக்கொண்டு இருந்த மல்லிகாவின் கையைப் பிடித்து, வலுக்கட்டாயமாக எழுப்பி, வீட்டுக்குள் கொண்டுவந்தாள். வீட்டுக்கார அம்மா என்கிட்ட பேசிக்கிட்டு இருந்த படித்த 'ரீசண்டான' பொண்ணையா, முகத்துல அடிக்கறது மாதிரி கூட்டிக்கினு போற. இரு இரு. உன்ன கவனிச்சுக்கிறேன்' என்று மனதுக்குள் கருவிக்கொண்டாள்.

மல்லிகாவிற்கு அந்த வீட்டிற்குள் இருக்கப் பிடிக்கவில்லை. மூட்டைப் பூச்சிகள், கடித்த இடங்களை விட்டுவிட்டு, பிடித்த இடங்களைக் கவ்வின. சந்திரா, மல்லிகாவைப் பார்த்துக்கொண்டே தன் கணவரையும் பார்த்தாள். "நானும் பெரிய இடந்தான். பெரிய இடத்துக்காரியோட அக்காவாக்கும் நான்" என்று, அவனிடம் சொல்வதுபோல், கண்கள் விரிந்தன. உதடுகள் லேசாகப் பிரிந்தன.

மூத்த மகளின் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு இருந்த பெருமாளும், மல்லிகாவை பெருமிதத்துடன் பார்த்தார். "இவளாவது நல்லா இருக்கட்டும். எல்லோருக்கும் சேர்த்து இவள் ஒருத்தியாவது நல்லா வாழனும் கடவுளே! அவளை நல்லா வாழ வை..."

அங்கே, எதுவுமே நன்றாக இல்லாததுபோல் தோன்றியதாலோ என்னமோ. மல்லிகா, பார்வதியைப் பார்த்து "வீட்டுக்குப் போகலாம்மா..." என்றாள். பார்வதி, அதைப் பொருட்படுத்தாததுபோல. மாப்பிள்ளைப் பையனிடம் குசலம் விசாரித்துக் கொண்டு இருந்தாள். விசாரித்துப் பார்த்ததில் அவன், அவளுக்கு தொலைவாய்ப் போன நெருங்கிய உறவு என்பது தெரிய வந்தது. அதில் அவளுக்கு மகிழ்ச்சி. மல்லிகாவுக்கோ. அதற்கு எதிர்மாறான உணர்ச்சி.

மற்றவர்கள் கேள்விக்குப் பதிலையும். பதிலுக்குக் கேள்வியையும் போட்டு பேசிக்கொண்டிருந்போது நொடிக்கு ஒரு தடவை வீட்டுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/31&oldid=1133677" இலிருந்து மீள்விக்கப்பட்டது