பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வளர்ப்பு மகள்

உளைச்சலில் அவள் சிக்கித் தவித்து. ஓரளவு சினந்தவளாய் இருப்பதுண்டு.

கல்லூரிக்குப் போகும் மல்லிகா. எப்போதாவது "சும்மா இருங்கம்மா. உங்களுக்கு ஒண்னுந் தெரியாது" என்று சொல்லுவாள். பார்வதி உடனே ஒன்றும் தெரியாத தன்னை. மல்லிகா, சொந்த அப்பாவுடன் சேர்ந்துகொண்டு. ஏமாற்றப் போகிறாள் என்றும். இன்றைக்கே சொத்து பற்றி இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்றும், நாள் முழுதும் துடிப்பாள். என்றாலும் கல்லூரியில் இருந்து மல்லிகா திரும்பியதும், நினைத்ததை மறந்து "பக்கடா போடட்டுமாம்மா... ஆரஞ்சு வேணுமா... ஆப்பிள் வேணுமா..." என்று கேட்பாள்.


6

வாசல் அருகே நின்ற ஆட்டோ ரிக்ஷாவின் டிரைவர் உள்ளே எட்டிப் பார்த்தார். மல்லிகா இன்னும் வராதது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையில், வாடகைக்கு. அமர்த்தப்பட்டிருக்கும் ஆட்டோ அது. மல்லிகாவை, கல்லூரியில் கொண்டுபோய் விடவேண்டும். மாலையில் கூட்டிக்கொண்டு வரவேண்டும்

குளியலறைப் பக்கமாய்ப் போன பார்வதி, ஆட்டோவைப் பார்த்ததும், மல்லிகாவின் அறைக்கு வந்தாள். மல்லிகா, எதுவுமே புரியாதவள்போல், மேஜையில் முன் கைகளை ஊன்றி, முகத்தை அவற்றில் வைத்து, நெற்றியை, கோடுகள் விழும் வண்ணம் சுழித்தாள். எங்கேயும் போகப் போவதில்லை என்பதுபோல், படுக்கும்போது உடுத்திருந்த பருத்தி ஆடையோடு இருந்தாள். பார்வதி, அவளருகே வந்து. முகத்தை நிமிர்த்தினாள்.

"பைத்தியம். இன்னுமா அந்த மனுசன் பேசினது மனசில நிக்குது? இதுக்கு வருத்தப்படுறவள். எதுக்குத்தான் வருத்தப்படமாட்டே? சொந்த அப்பாதானே பேசினார்? பேசினால் பேசிட்டுப் போகட்டும். இனிமேல் வேணுமுன்னால், அங்கே போகவேண்டாம். சரி. ஆட்டோ வந்துட்டுது. புறப்படுடி.."

"சொந்த அப்பா. சொந்தமில்லாத அப்பான்னு பேசுனிங்கன்னால், எனக்கு கோபங்கோபமாய் வரும். அப்பா பேசிட்டார்னு நான் வருத்தப்படல.. அந்த ஆள். நாலு பேரு மத்தியில் சனியன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/38&oldid=1133686" இலிருந்து மீள்விக்கப்பட்டது