பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வளர்ப்பு மகள்

"என்ன போட்டிம்மா..?"

"கட்டுரைப் போட்டி"

"அப்படின்னா?"

"சும்மா கிடங்கம்மா... உங்களுக்கு ஒண்ணுந் தெரியாது. உங்ககிட்ட சொன்னதே தப்பு துளைத்து எடுத்துடுவீங்க, கட்டுரை என்றாலே என்னன்னு தெரியாது. அதை விளக்கிட்டு, அப்புறம் போட்டியைப் பற்றி விளக்க இரவு மணி பன்னிரண்டாயிடும். பசிக்குதும்மா. அப்பா வரும்போது, விவரமாய் சொல்றேன். நீங்கள் அப்போ கேளுங்க. இப்போ பசிக்குது."

பார்வதிக்கும், இப்போது மனதுக்குள் பசியெடுத்தது. அண்ணன் சொன்னது சரிதான். நான்தான் ஒண்ணும் தெரியாதவளாய் வெளுத்ததை எல்லாம் பாலுன்னு நினைக்கிறேன்.

பார்வதி சற்று காரமாகவே பதில் சொன்னாள் இப்போ நான் உன் கண்ணுக்குப் பிடிக்குமா? என்னைப் பார்த்தால் மனுவியாய்த் தெரியுமா? எல்லாம் தலைவிதி."

பார்வதி சொல்லிவிட்டு, சமையலறைக்குள் போய்விட்டாள். மல்லிகா, அவளை விநோதமாகப் பார்த்தாள். அம்மா ஏன் இப்படிச் பேசுறாங்க? மல்லிகா உள்ளே போய் அவளின் கையைப் பிடித்துக்கொண்டு, உடம்புக்கு எதுவும் பண்ணுதாம்மா என்று கேட்டாள்.

அவளையே வைத்தகண் வைத்தபடி பார்த்தாள் பார்வதி. அண்ணன் சொன்னதையெல்லாம் அவளிடம் சொல்லலாமா என்றுகூட நினைத்தாள். பிறகு அந்த அருமை அண்ணன், "எனக்கென்னமோ மல்லிகா பசப்புக்காரியா தெரியுது" என்று சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

பார்வதி எதுவும் பேசாமல், அவளுக்கு இடியாப்பத்தைக் கொடுத்தாள். மல்லிகாவும் மறு பேச்சுப் பேசாமலே, எந்திரம்போல் தந்ததை வாங்கிக் கொண்டாள்.

இரவு சொக்கலிங்கம் வந்தார். மல்லிகாவால் தன் வெற்றி விவரத்தை அடக்கி வைக்க முடியவில்லை. அப்பாவிடம் கட்டுரைப் போட்டியின் விவரத்தை விவரமாகச் சொன்னாள். அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே. பார்வதி தனது தாம்பத்ய அறைக்குள் போய்விட்டாள்.

முன்பெல்லாம் காதுவிரியக் கேட்கும் அம்மா இப்படிப் போவதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/44&oldid=1133693" இலிருந்து மீள்விக்கப்பட்டது