பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

49

அழுத்தமான சுயமரியாதையும். அவனுக்கு ஊன அழகு கொடுக்காத ஒரு ஞான அழகைக் கொடுத்திருந்தது. குறைந்தபட்சம், அப்படி இருப்பதாக பல பெண்கள் நினைத்தார்கள் மிதவாதியான மல்லிகா, இந்த நினைப்பைப் பொறுத்த அளவில் ஒரு தீவிரவாதி. தன்னை மீறிய, தன்னையே அறியாத ஒரு காதல் தீவிரவாதி.

"சொல்லுங்க... ப்ளீஸ்... எதற்காகப் பேசவில்லை? பசங்களோட கலாட்டாவுக்குப் பயந்துட்டீங்களா?"

மல்லிகா, பேசப் போனாள். அப்படி பேசப் போனால், அழுகை வந்திடும்போல் தோன்றியது. அடக்கிக் கொண்டாள். பிறகு, தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள். அவனிடம் ஒராண்டு காலமாக சாதாரணமாகப் பேசிப் பழகுபவள். அந்த உரிமையில்தான், அவனும் கேட்டான். ஆகையால் இப்போதும் சாதாரணமாக ஆனால் உள்ளர்த்தத்துடன் பேசினாள்.

"பெண்கள். பொருளாதார விடுதலை இல்லாததாலே... கணவன்மார் செய்யும் கொடுமையை... சகிச்சிக்கிறதாச் சொன்னீங்க... உண்மைதான். அதேசமயம். கல்யாணம் ஆகாத பொண்ணுங்களும், பொருளாதாரப் பாதுகாப்புக்காக... ஏதோ ஒரு இனம்புரியாத பயத்தால், வேண்டப்படாத இடத்தைப் பிடிச்சுக்கிட்டே இருக்கலாம், இல்லையா?"

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"நான் கேட்கிறது. பொருளாதார, சமூக நிர்ப்பந்தத்தால் கல்யாணம் ஆகாமல் இருக்கிற பெண்களுக்கும் ஏதாவது செயல்திட்டம் இருக்கா?"

"நீங்கள் பேசுவதைப் பார்த்தால். சொந்த அனுபவம் மாதிரி..."

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் கொடுத்து வச்சவள். எல்லாப் பெண்களுக்கும் ஒரு அப்பா அம்மா, எனக்கு ரெண்டு அப்பா அம்மா என் பிரச்சினை கிடக்கட்டும். அது... வேண்டாம். விட்டுடுங்க். குறிப்பிட்ட ஒரு பழக்கவழக்கத்தில் ஆட்பட்ட பெண். அந்தப் பழக்கவழக்கமாக சமூகத் தட்டுலே இருந்து தாழ்ந்து போகாமல் இருக்க, அவளோட உரிமையை மட்டும் கேட்டால் போதாது. ஒரு பணக்கார இளைஞன் அவளைக் கல்யாணம் பண்றதினாலும் முடிந்து விடாது. இதுக்கு வேறே வழி இருக்கா?"

"கொஞ்சம் யோசிக்கிறேன். ஒரு நிமிடம்... கொடுங்க வந்து... ஒரு பெண். சமுதாயத் தட்டில் இருந்து கீழே இறங்கிடுவோமோன்னு பயப்படாமல் இருக்கணுமுன்னா. கீழ் தட்டுன்னு ஒண்ணு இருக்கப்படாது. அதாவது எல்லாம் பொருளாதார சமத்துவம் பெறணும். பெண்களோட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/63&oldid=1133723" இலிருந்து மீள்விக்கப்பட்டது