பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

51

"என்னால உதவி பண்ண முடியுமா?"

"பொருளாதார சுதந்திரம் இல்லாத உங்களாலே, எனக்கு சுதந்திரம் வராது. அதுக்காக உங்கள் மூலம் வரக்கூடாதுன்னு நினைக்கவில்லை. சொல்லப்போனால் வரணுமுன்னு நினைக்கிறேன்!"

சற்று நேரத்திற்கு முன்பு, ஓட்டலில் சும்மா காபி குடிக்கக் கூப்பிட்டபோது முகத்தைச் சுழித்து, கழுத்தை கேள்விக்குறி போல் வளைத்த இந்தப் பெண், ஏன் நாணத்துடன் தலைகவிழ்கிறாள் என்பது புரிய, அவன் மலைத்தும், மகிழ்ந்தும் நின்றபோது, மல்லிகா மெல்ல நடந்தாள். சரவணன் சிறிதுநேரம் நின்றான். பிறகு சைக்கிளை வேகமாக உருட்டிக்கொண்டு, அவளருகே போய், "நான் ஒட்டலுக்குக் கூப்பிட்டதை தயவுசெய்து தப்பா நினைக்காதம்மா. எத்தனையோ பெண்கள் 'போகலாமா காபிக்கு' என்று சொல்வதை பொழுதுபோக்கா வைத்திருக்கிறாங்க. ஆனால் நீங்க அப்படிப்பட்ட இனம் இல்லை. உங்களைப் பார்த்தாலும் தப்பாக் கூப்பிடத் தோணாது." என்றான்.

"பொழுதுபோக்கும் பெண்களைப் பற்றி நல்லாத்தான் தெரிந்து வச்சிருக்கீங்க. சொந்த அனுபவமா?"

"உண்டு. பிறர் சொல்வதைக் கேட்ட அனுபவமும் உண்டு. உன்கிட்ட பேசிட்டேனா... இனிமேல் நாலு நாளைக்கு எந்தப் பெண் கூடேயும் காபி குடிக்கப் போகமாட்டேன். போகத் தோணாது. செக்ஸ் கிளாமரை, ஒரு குடும்பப் பெண்ணாலதான் விரட்ட முடியும், நான் வரேன்."

சரவணன் சைக்கிளை சுற்றி வளைத்துக்கொண்டு அவளுக்கு எதிர்த் திசையில் உருட்டினான். "கடவுளே. இவரு, நாலு நாளைக்கு மட்டுமல்ல. எப்போதும் காபி குடிக்க, 'நாலு பேரோடுதான் போகணும். ஜதையாய் போகப்படாது' என்று மனதுக்குள்ளேயே பிரார்த்தித்துக் கொண்டு மல்லிகா நடந்தாள். இனிமேல் திரும்பி வந்தாலும் வருவாரோ சூதுவாது இல்லாதவர்... வந்தாலும் வருவார். அய்யோ, அப்படி வந்தால், நாலுபேர் தப்பா நினைப்பாங்களே?

சரவணன் 'வரக்கூடாது' என்று வெளிமணம் ஒப்புக்குச் சொல்ல, இன்னும் ஒரு தடவை வரப்படாதா? சைக்கிள்தான் இருக்கே என்று உள்மனம், அவளை மீறித் துடிக்கும்படி நடந்து கொண்டிருந்த அவளை, பலதடவை பின்னால் திரும்ப வைத்தது. பிறகு அவள் மடமடவென்று நடக்கத் துவங்கினாள். சரவணனுடன் பலதடவை பேசியிருக்கிறாள். ஆனால் இன்று அவனின் ஒவ்வொரு சொல்லுக்கும் புதுப்பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/65&oldid=1133726" இலிருந்து மீள்விக்கப்பட்டது