பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வளர்ப்பு மகள்

வேற குடுச்சிட்டு திட்டுவாரு. அதுக்காக இந்த நொள்ள ராமனை கட்டிக்க முடியுமா? இப்படியெல்லாம் எண்ணினாள். மல்லிகா, வெறித்த கண்களுடன், கடித்த உதடுகளுடன் அவள் கலங்கினாள்.

கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும், எந்த மேளத்தை அமர்த்த வேண்டும், யார் யாருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று வெளியே பலமாக விவாதங்கள் எழுந்தன.

மல்லிகா குப்புறப் படுத்தாள். அவள் மனத்திரையில் சரவணன் வந்தான். வந்த வேகத்திலேயே போய் விட்டான். ஆனால் கிழிந்த புடவையும், மஞ்சள் கயிற்றுக் கழுத்தும், தனித்தனியாக வந்து பின்பு மருண்ட பார்வையோடு, மிரண்ட முகத்தோடு, கூனிக்குறுகிய தோற்றத்தோடு, ஒரு உருவம் வந்தது. அது எவ்வளவு விரட்டியும் போக மறுத்தது. அவள் செல்லம்மா... மல்லிகாவின் நிஜமான அம்மா. அவளால் இதுவரை ஒதுக்கப்பட்ட அவளைப் பெற்ற பாவி!


12

செல்லம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. "கடைசியில் ராமனுக்குத்தான் கட்டப் போகிறார்களா? இதுக்கா பெத்தேன்? அவரு, 'தத்து கொடுக்காதே கொடுக்காதே'ன்னு சொன்னாரே, நான் பாவி, தூரத்தில் நின்னாவது, மகள் உயரத்துல இருக்கறதை தலைநிமிர்ந்து பார்க்கலாமுன்னு நினைச்சேன். இப்போ பள்ளத்தில் விழப்போறவளை, நான்தானே தலைகுனிந்து பார்க்கணும் போலிருக்கு, அட கடவுளே. இங்கே கூட்டி வந்துடலாமா? எப்படி முடியும்? ராணி மாதிரி இருக்கிற அவளால், இந்த தேனீக் கூட்டில் இருக்க முடியுமா? இருக்கத்தான் சொல்லலாமா?"

செல்லம்மா, முழங்கால்களுக்குள் தலையை வைத்து. முட்டிக்கொண்டும். மனதுக்குள் மோதிக்கொண்டும் இருந்தபோது, அவளுடைய கடைசி மகள் முறைவாசல் செய்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு குடித்தனமும்தத்தமக்குள்ளே முறை வைத்துக்கொண்டு, சதுரமாக அமைந்திருக்கும் கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும். பொதுஇடமான களத்தைப் பெருக்க வேண்டும். இதற்கு முறைவாசல் என்ற பரிபாஷை இன்னொரு மகன் சரியாய் எட்டு மணிக்கு. ராஜாதி ராஜ கம்பீரத்துடன், தோழி சகிதமாய் வரும் வீட்டுக்கார அம்மாவுக்கு குழாயை விட்டுவிட வேண்டும் என்பதற்காக அவசரமாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/68&oldid=1133729" இலிருந்து மீள்விக்கப்பட்டது