பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

55

தண்ணீர் பிடித்தான். ஒரு பையன் தெருவில் நின்ற ஒரு டிராக் வண்டியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

செல்லம்மாளின். பித்துப் பிடித்த தலைக்குள்ளும் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

கணவனிடம் சொல்லாமல் இருக்க முடியாது. இந்த கல்யாணத்தைத் தடுத்து ஆகவேண்டும். அவள் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பெருமாள் பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் வருவார். கோணி வியாபாரம் செய்பவர். கோணிக்கடையில் கோணிகளை லைட்டீஸ் கோணி, உப்புக் கோணி, அஸ்கா கோணி என்று பிரிவுபடுத்தி, பிரிவுப்படியான பணத்தை ஒன்றுபடுத்தி பத்து ரூபாய் லாபத்தோடு வீட்டிற்கு வந்துவிட்டார். அவர் வந்ததும் வராததுமாக, செல்லம்மா, அவரிடம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நேரமோ ஆகிக் கொண்டிருந்தது. அவர்கள் ஜாதியில் நிச்சயத் தாம்பூலம் ஆகிவிட்டால் பாதிக் கல்யாணம் முடிந்தது மாதிரி. வேறு எவனும் கல்யாணம் செய்ய முன்வர மாட்டான்.

கணவன், தான் சொல்லப்போகும் செய்தி கேட்டு, தன்னை அடித்தாலும் அடிக்கலாம் என்று நினைத்து, அப்படி அடித்தால் முகத்திலோ தலையிலோ படக்கூடாது என்று எண்ணியவள்போல், செல்லம்மா, ஒருபுறமாக தோளைக் காட்டிக்கொண்டு, ஜாக்கிரதையான இடைவெளி கொடுத்துப் பேசினாள். கணவனுக்கு இதுவரை விஷயம் தெரியாது.

"உங்கள் மகள் மல்லிகாவை கூட்டி வாறீங்களா?"

"அவளை என் மகள்னு சொல்லாதடி இங்க வந்தவுடனேயே வீட்டுக்குப் போகணுமுன்னு சொல்றவள். என் மகளாய் இருக்க மாட்டாள்."

"நீங்க அப்படிச் சொல்றதுனால்தான். நாம் பெத்த பொண்ணு சீரழிறாள்."

"என்ன சொல்றே?"

"பார்வதியோட அக்காள் மகன் ராமனுக்கு அவளை கொடுக்கிறதுன்னு நிச்சயம் பண்ணிட்டாங்களாம்"

"என்ன... இன்னொரு தடவை சொல்லு"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/69&oldid=1133730" இலிருந்து மீள்விக்கப்பட்டது