பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வளர்ப்பு மகள்

செல்லம்மா, தன் புது மகளையே பார்த்தாள். அவள் பிறந்தபோது. குழந்தை எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலில் பிரசவ மயக்கம் தீர்ந்த மறுநிமடமே. எப்படிப் பார்த்தாளோ, அப்படிப் பார்த்தாள். பெருமாள். தலையில் கைவைத்து, யோசித்துக் கொண்டிருந்தார். இனிமேல் குதிரையை விடணும்... 'பட்டையை' ஒழிக்கணும்...

மல்லிகாவும், அவர்கள் அன்பில் கட்டுண்டு, மெய்மறந்து இருந்தாள். அந்த வீட்டைப் பார்த்து முன்பு முகஞ்சுழித்த அவளுக்கு, அந்த வீட்டு மனிதர்களைப் பார்க்கப்யார்க்க நெஞ்சமெல்லாம் நிறைந்தது. சிறிதுநேரத்திற்குப் பிறது, அவரவர்; தத்தம் வேலைகளைப் பார்க்கத் துவங்கியபோது, அவளுக்குத் தனிமை வாட்டியது. தான் செய்தது சரியா என்று கூடத் தோன்றியது. எங்கேயோ போய்விட்டதாக நினைத்த அவள் அம்மா, ஒரு மசால் தோசையுடன் வந்து மகள் முன்னால் காணிக்கை செலுத்துபவள்போல் நின்றதைப் பார்த்ததும், அவள். தாயாகி தாயாகாமல் போன அந்த காய்ந்தவளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டாள். பிறகு, மசால்தோசையை வேண்டாமென்று சைகை செய்தாள்.

வருவோர் - போவார், "இப்படியா செய்துட்டாங்க" என்போர், "இருந்தாலும் நீ வரப்படாது" என்போர் - இப்படியாக பலர் வந்து பேசியதைக் கேட்டுக்கேட்டு, எதோ ஒரு பெரிய ஜனச் சங்கிலியில், தான் ஒரு வட்டமாக இருக்கும் லேசான - மிக லேசான பெருமிதத்தில் மல்லிகா அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

இரவு வந்தது. எங்கே படுப்பது? உள்ளே மூட்டைப் பூச்சிகள். வெளியே கொசுக்கள். "டன்லப் பில்லோ" கட்டில் கிடையாது. மேலே மின்விசிறிக்குப் பதிலாக, ஒரு பெருச்சாளிதான் சுற்றிக்கொண்டு வந்தது. மல்லிகா தயங்கிக் கொண்டே நின்றபோது. 'பிள்ளைத் தாய்ச்சியான' அவள் அக்காள் சந்திரா, கோரம்பாயை விரித்து தன் கல்யாணப் பட்டுப் புடவையை, இரண்டாக மடித்து. கைகளால் தேய்த்து பாயில்மேல் விரித்தாள். செல்லம்மாள். ஒரு கிழிந்த தலையணையை எடுத்து, வீட்டுக்காரரின் துண்டால் அதைச் சுற்றி, பாயின் விளிம்பில் வைத்தாள். பையன்கள். அக்காளுக்கு யார் விசிறி வீசுவது என்ற சர்ச்சையில் ஈடுபட்டார்கள். ஒருவனுக்கொருவன். அடித்துக் கொண்டிருப்பான். வெளியே அப்பா இருப்பது தெரிந்து, வெறும் சர்ச்சையில்தான் இருந்தார்கள். பெருமாளோ, இவர்கள் அடித்துக் கொண்டிருந்தாலும், கண்டிக்க மாட்டார். அவர் பிரச்சினை அவருக்கு. மல்லிகாவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/78&oldid=1133740" இலிருந்து மீள்விக்கப்பட்டது