பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வளர்ப்பு மகள்

பாசம்... எவ்வளவு அன்பு... தியாகராய நகருக்குப் போனால், அப்பா அம்மாவோடு. ராமனையும் பார்க்க வேண்டியதிருக்குமே...

மல்லிகா முடங்கிப் படுத்தாள். செல்லம்மா. மகள் தலையை எடுத்து. தன் மடியில் போட்டுவிட்டு. குழந்தையை குலுக்குவதுபோல் குலுக்கினாள். மல்லிகா. கை கால்களைச் சுருட்டிக்கொண்டு. முடங்கிக்கொண்டே இருந்தாள்.


15

தியாகராய நகர் வீட்டுக் கதையும், இதே கதைதான்.

மல்லிகா, தந்தையுடன் வெளியேறிவிட்ட செய்தியை, கடைப் பையன் ஒருவன் மூலம் கேள்விப்பட்ட சொக்கலிங்கம், கல்லாவில் போடப் போன காசுகளை, சிறிதுநேரம் அப்படியே வைத்துக் கொண்டிருந்தார். பின்பு கடையில் இருந்து, மேலே ஒரு கம்பி வட்டத்தில் கட்டப் பட்டிருந்த கயிற்று வளையத்தைப் பிடித்துக்கொண்டே, கீழே இறங்கி ஓடாக்குறையாக நடந்தார்.

வாசலுக்கு வந்ததும். "என் மகளை துரத்திட்டியாடி பாவி... எங்கே இங்கே... இங்கே வாடி... அவள் போன பிறகு உனக்கென்னடி இங்கே வேல..." என்று குரல்கொண்ட மட்டும் கத்திக்கொண்டே படியேறினார். இப்படி மனைவியை. அவர் எப்போதும் பேசியதில்லை. கடைப்பயல், விவகாரத்தை 'ஊர்ப்பய பிள்ளை' என்று தன்னை அடிக்கடி திட்டும் பார்வதிக்குப் பாதகமாக அழுத்தியழுத்திச் சொன்னதால். சொக்கலிங்கம் மனைவியைத் தீர்த்துக் கட்டிவிடுவது என்ற உறுதியுடன்தான் கத்தினார்.

பார்வதி, வெளியே வரவில்லை. பயங்கரமான நிசப்தம். களையான ஒன்று. அங்கே இல்லை என்பதைக் காட்டுவதுபோல் ஒரு வெறுமை. நடக்கக்கூடாத ஒன்று நடந்து. அப்படி நடந்ததை மாற்ற முடியாதபடி இன்னொன்று புகுந்துவிட்டது என்பதுபோல், ராமன், தன் தோள்களை வளைத்துக்கொண்டே அங்கே நின்றான். சின்ன 'நாய்னா'வைப் பார்த்ததும். ஒரு பக்கமாக ஒதுங்கிக் கொண்டான்.

ஊஞ்சல் பலகையில், மல்லிகா விட்டுவிட்டுப் போன ஸ்கேலை எடுத்துக்கொண்டே வாயில் தகாத வார்த்தைகளை வீசிக்கொண்டே சொக்கலிங்கம். சமையலறைக்குள் போனார். போனவர் வாயடைத்துப் போய் நின்றார். பார்வதி. சமையலறை மூலையில், தலையை வைத்துப் புரண்டுகொண்டே "போயிட்டியாடி... போயிட்டியாடி என் ராசாத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/82&oldid=1133744" இலிருந்து மீள்விக்கப்பட்டது