பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

69

எங்கள விட்டுட்டுப் போக உனக்கு எப்படியடி மனம் வந்தது" என்று புலம்பிக் கொண்டிருந்தவள். கணவனைப் பார்தததும். கட்டிப் பிடித்து அழுதாள். ஒருநாளும் தரக்குறைவாகப் பேசாத கணவன். கடந்த இருபத்தைந்தாண்டுகால தாம்பத்திய வாழ்க்கைக்கு ஒட்டுமொத்தமாக, வட்டியும் முதலுமாக திட்டித் தீர்க்க. சுரணை இல்லாதவளாய். அவரது காலில் தலைபட புரண்டாள்.

மனைவி நடிக்கிறாளோ என்றுகூட சொக்கலிங்கம் முதலில் நினைத்தார். இல்லை. நடிக்கவில்லை. அப்படி இருந்தால், இப்படிப் பித்துப் பிடித்தவளாய் இருக்க மாட்டாள். இப்படி காலில் புரண்டு கதற மாட்டாள். அவளையே சிறிதுநேரம் பார்த்துவிட்டு "அவள் மெய்யும், மெய்மையும், உடலும் உள்ளமும் ஒருங்கிணைய அழுகிறாள்" என்பதை, அவருக்குரிய அனுகூலங்களாக வைத்து "என்னம்மா நடந்தது. எதுக்காவ அந்த குடியன்கூட போயிட்டாள்" என்று படபடப்பாகவும், அதேசமயம் மனைவிமீது பரிதாபம் சொட்டும்படியாகவும் கேட்டார். மனைவியை இந்த மாதிரி அழ வைக்கிற நிலைமைக்கு அடித்துப் புரள்கிற அளவுக்கு, மல்லிகா கொண்டுபோய் விட்டுவிட்டாளே என்று அவருக்குத் தன் வளர்ப்பு மகள் மீதும் கோபம் ஏற்பட்டது.

பார்வதி அவரைப் பார்த்து அழுதுகொண்டே விளக்கினாள்.

"ராமனைக் கட்டிக்க முடியாதுன்னாள். உன் அம்மா வீட்டுக்குப் போயிடுடின்னு, ஒரு பேச்சுக்குச் சொன்னேன். எங்கேயாவது போயிடுன்னு, ஒரு தாய்க்காரி கோபத்துல சொல்றது மாதிரி சொன்னேன். சொல்லியிருக்கக் கூடாதுதான். நான்... பாவி... எந்த நேரத்துல அப்படிச் சொன்னேனோ... அந்த நேரத்துல... அந்த குடிகாரப் பாவி வந்திருக்கான். என் செல்லக்கண்ணை கூட்டிக்கிட்டுப் போயிட்டான். போயேண்டி போயேண்டி.. நான் செத்தாடி போயிடுவேன். அய்யோ, என் மனசு கேட்க மாட்டேங்குதே... கேட்க மாட்டேங்குதே...!

"இப்ப அழுது என்னடி பிரயோஜனம். இந்த புத்தி அப்பவே இருந்திருக்கணும்..."

"என் புத்திதான். இரப்பாளப் புத்தி. நான் படியாத முண்டம். அவளுக்குப் புத்தி. எங்க போச்சு? 'இது என் வீடு. நீ வேணுமுன்னா போ நான் போகமாட்டேன்'னு அவள் சொல்லக்கூடாதா? இது, அவள் வீடுதானே. அவள் எப்படிப் போகலாம்? எப்படிப் போகலாமுன்னேன்..."

"சரி எழுந்திரு. எல்லாம் இந்த ஓணான் பயலால் வந்த வினை. நாம ரெண்டுபேரும் போய். அவளைக் கூட்டிக்கிட்டு வருவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/83&oldid=1133745" இலிருந்து மீள்விக்கப்பட்டது