பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

షాAf .ޗުންް"

1. வளையப்பந் தாட்டத்தின்

வரலாறு

உருவும் திருவும்

காண்பவர்களைக் கவர்ந்திழுக்கின்ற கவின்மிகு ஆட்டம்: கட்டுக்கடங்காத ஆவலுடன் விளே யாட வருகின்ற வர்களுக்கு மிக எளிதாகக் கைவரும் ஆட்டம்: கட்டுடல் உள்ளவர்கள் மட்டுமே ஆடமுடியும் என்றில்லாமல், இளமை முதுமை என்ற பாகுபாடின்றி எல்லா வயதினரும் இனிமையோடு பங்கேற்று மகிழ்கின்ற ஆட்டம்; ஏழை எளியவர், செல்வர்செல்வாக்கு மிக்கவர்கள் என்றில்லாமல். எல்லார்க்கும் ஏற்றதொரு நிலையினை உருவாக்கித் தரும் ஆட்டம் என்று ஒன்று உண்டென்ருல், அது வளையப் பந்தாட்டம் தான்.

இரண்டு கம்பங்கள், ஒரு வலை, ஒரு ரப்பரால் ஆன வளையம். விளையாட ஒரு சிறு ஆடுகளம். விளையாடத் துடிக்கின்றவர்களுக்குத் தேவைகள் இவைபோல் விரைவில் முடிந்துவிடுகின்றன. 'விரும்பிய இடத்திலே விளையாடலாம். விரும்புபவர்கள் அனைவரும் விரைவில் இப்பொருட்களைப் பெறலாம்' என்ற அள்வுக்கு மிக எளிமையான ஆட்டம். அதே நேரத்தில் வளமையான ஆட்டம்.