பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

என்ருல், அந்தத் தட்டுதான் ஒரு அரிய கற்பனையை மக்கள் மனதிலே தோற்றுவித்திருந்தது என்பதை குறிக்கத்தான் மேலே கூறிய நிகழ்ச்சிகளை விவரித்தோம்.

தட்டெறியும் நிகழ்ச்சிதான் எங்கும் நடக்கவில்லை. யென்ருலும், அதுபோன்று, ஒரு பொருளே எடுத்து விட்டெறியும் ஆசை எவரையும் விட்டபாடில்லை. அந்த அடிப்படை நினைவிலிருந்தே நமது வளையப் பந்தாட்டத்தின் வரலாறு ஆரம்பித்து, குதிரைக்கு காலின் குளம்புகளில் லாடம் கட்டத் தொடங்கிய காலத்திலிருந்து தொடங்கு, கிறது என்ருல், அதுதான் உண்மை என்றும் கூறலாம்.

குதிரைகளுக்கு லாடம் கட்டும் பழக்கம் கிறிஸ்துவின் சகாப்தம் தொடங்கியதற்குப் பிறகு என்றுதான் வரலாறு கூறுகிறதே தவிர, குறிப்பிட்டு ஒரு காலத்தைசுட்டிக் காட்ட இயலாமல் தொடர்ந்து செல்கிறது.

குதிரைக்கு லாடம்

கிறிஸ்துவ சகாப்தம் தொடங்கிய சிறிது காலத்திற்குப் பிறகு, குதிரைகளின் குளம்புகளுக்கு லாடம் கட்டும். பழக்கம் கிரேக்க நாட்டு சேனைகள், ரோம் காட்டு சேனைகள் மற்றும் வேறுபல நாடுகளிலிருந்தும் தொடர்ந்தது. -

சந்தோஷமான சவாரிக்கும், வீர விளையாட்டான வேட்டைக்கும், மற்றும் சாகச வேலைகளுக்கும் பயன்படுத் 'தப்பட்ட குதிரைகள், பின்னர் இராணுவத்திற்கும் சண்டைக்கும் தேவைப்பட்ட சாமான்களை ஏற்றிச்செல்லும் தளவாட வண்டிகளேயும் இமுத்துச் செல்லப் பயன்படுத்தப் பட்டன. ஆரம்ப நாட்களில், அதாவது தளவாட வண்டிகளே இழுத்துச் செல்லப் பயன்படுத்துவதற்கு முன்னரே