பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

குதிரைகளின் குளம்புகளுக்கு லாடம் கட்ட வேண்டிய தேவை இல்லாமல் தான் இருந்தது.

போர்க்களத்தில் சவாரிக்கும் போர்க்களத்தைக் கடக் திடவும் குதிரைகளே அதிகமாகப்பயன்பட்டன. காடுகளுக்கு இடையிலும், மலேகளில் ஏறியும், பள்ளத்தாக்குகளில் கடந்தும், சேறு, சகதி, பாறை, பனி, கல் முள் என்று பாராது கஷ்டப்பட்டு பாரவண்டிகளே இழுத்துச் செல்லும் குதிரைகளின் குளம்புகள், கடினமான உழைப்பின் காரணமாகப் புண்ணுகிப் போயின.

புண்ணுன குதிரைகள் பண்ணும் சண்டித்தனத்தால், இராணுவத்தினர் செய்வதறியாது திகைத்தனர். குதிரை களின் குளம்புகளில் ரணம் வராது பாதுகாத்தால் தான், மேற்கொண்டு போர்க்களபயணத்தை சுலபமாக்கிட முடியும் என்ற ஓர் சூழ்நிலைக்கும் ஆளாயினர். அதற்காக குதிரைக் குளம்புகளில் உள்ள வளைவினைப் போலவே, இரும்புத் துண்டுகளை வளைத்து குளம்புகளுக்கு லாடம் கட்டினர்கள்.

நடையும் ஒட்டமும் மிகுதியாகப் போனதின் காரண மாக, குதிரைகளின் லாடங்கள் தேய்ந்து போயின. தேய்ந்த லாடங்களைக் கழற்றித் தாக்கி எறிந்து விட்டு, புதிய லாடங்களே குளம்புகளில் கட்டினர் இராணுவத்தினர். வேண்டாத பொருட்கள் வீசி யெறியப்படுவது இயற்கை தானே! அதுபோலவே, குதிரையின் பழைய லாடங்களும் அவர்களால் தூக்கி வீசப்பட்டன.

ஒருவருக்கு உதவாதது, இன்ைெருவருக்கு உதவும் என்பது உலகத்தின் கியதிதானே! வேண்டாம் என்று இராணுவத்தினர் வீசி யெறிந்த லாடங்களே விரும்பிப் பொறுக்கிக்கொண்டனர் ஒரு சிலர்! அந்த ஒரு சிலர் யார் என்று கினைக்கின்றீர்கள்! இராணுவத்தினர் தங்கியிருக்கும் கூடாரங்களை அமைத்துக் காக்கும் உதவியாளர்கள்தான். (Camp Followers) ** * *